(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

அவனே முடிவு பண்ணட்டும்."

"அஜய் நீ என்ன சொல்ற ?"

"நான் என்ன சொல்ல, எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க, நான் யோசிச்சு சொல்றேன், மாஸ்டர்!"

'சரி ராஜா, உனக்கு தெரியுமில்ல நான் ஏன் இந்த சான்ஸ்ஸ விடாதன்னு சொல்றேன்னு , ஒன்னு நீ பெரிய ஸ்டார் ஆயிடுவ, இன்னொன்னு உனக்கு உன் ட்ரீம் ஹாஸ்பிடலுக்கு பணம் கிடைக்கும். அங்க இங்க கடன் வாங்க வேணாம், நல்ல சான்ஸ் வரும்போது ஏன் வேண்டாம்ன்ற, ஹாலிடேய்ஸ்ல முழு நேரமும் உழைச்சு படத்தை முடிச்சு கொடுத்துடு அவ்வளவுதான். "

"சரி மாஸ்டர் நான் ரெண்டு நாள்ல சொல்றேன், மாஸ்டர்!"

"சரிடா ராஜா! "

சாப்பிட்டு முடித்தார்கள்.

"சரி ரொம்ப நேரமாச்சு நாங்களும் கிளம்பறோம்மா தனம் ."

"பாட்டிம்மா, இம்ரானும் சாய்ராவும் இங்கயே இருக்கட்டுமே, நாளைக்கு செல்வம் கூட அனுப்பி வச்சுடறேன் பாட்டிம்மா."

அவர், ஜாபரை பார்த்தார், "இல்ல அஜய், அவங்கள திரும்பி அனுப்புவோம் ஆனா அவங்க இல்லாம எங்களுக்கு தூக்கம் வராது அஜய், தப்பா நினைக்காத."

அவன் தனத்தை பார்த்தான், அவள்  மனசு, ஒரு நிலையில் இல்லை என்ன செய்வது ஆதூ  என்ன பண்ண போகிறான், அவனும் இங்கே இருந்தா அவனை எப்படி சமாளிப்பது, அஜய் எதிரில் அவனை எப்படி எதிர் கொள்வது என்று மனதில் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

"சரிம்மா கிளம்பறோம்!"

"ஓகே அஜய் நானும் கிளம்பறேன்!" அப்துல், அஜயின் தோளில் கையை போட்டு அவனை அனைத்து தலையை ஆட்டினான்.

அஜய்க்கு, 'என்ன ஆச்சு எதுக்கு இவர் கிளம்பிட்டார்? என்று மனது கலங்கியது, அம்மாவை திரும்பி பார்த்தான், அவள் சாய்ராவின் கையை பிடித்து அவளை கொஞ்சிக் கொண்டிருந்தாள் எதுவுமே காதில் விழாத மாதிரி,

"அபூ, நீ எதுக்கு வர நீ இங்கயே இருந்துக்கோயேன்?" கேள்வியும், உத்தரவு மாதிரியும் கூறினார் நிக்கத்.

தனம் உஷாரானாள் 'ஐயோ என்ன நடக்க போறதோ?' நினைத்துக் கொண்டாள்.

"இல்ல அம்மீ, பிறகு எப்பவாவது வரேன், இப்ப போலாம் வாங்க, ஓகே தனம் நான் போயிட்டு

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.