(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"இல்ல அஜய், இது சரிவராது அஜய், ப்ளீஸ்!"

"ஏம்மா, நாங்க வேற மதம்னு நினைக்கிறியா?" நிக்கத் சோகத்தோடு கேட்டார்.

அவள் பதில் பேசாமல் இருந்தாள்.

"என்னம்மா தனம், நாங்க இன்னிக்கு ஒரு முடிவு தெரியத்தான் வந்திருக்கோம், என் மகன் மேல தப்புதான் தனம் அதை சரி செய்யனும், இல்லேன்னா நாங்க பெரிய பாவம் செய்ததாகும் அன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் தெரியாத செய்ஞ்ச தப்பு இன்னிக்கு தெரிஞ்சே நாங்க செய்ததாகும் அதனால,

நீ எங்க குடும்பத்துக்கு பாவம் சேர்க்க விடாதம்மா, இந்த தப்ப சரி செய்ய விடும்மா."

"நான் பாவத்தை பத்தில்லாம் பேசலமா, ஆனா அப்பாவோட நம் குடும்பம் நாம ஒண்ணா இருக்கலாம்மா, அதுதான் வேணும் எனக்கு, அதுக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க."

"இல்ல ஆண்ட்டி, மதமெல்லாம் நான் பார்க்கல ஆண்ட்டி, ஆனா அப்துலுக்கு ஏற்கனவே கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்கு, அந்தக் குழந்தைகள் மனசுல எந்த வருத்தமும் இருக்கக் கூடாது. அதனால இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன் கொஞ்சம் புரிஞ்சுக்கங்க."

"அவ்வளவுதானா தனம்மா, நான் என்னவோன்னு கவலை பட்டேன். இத பாரு அவனோட மனைவி தான் இப்ப உயிரோட இல்லையேம்மா, நீ அந்த குழந்தைகளுக்கு நல்ல தாயா இருப்பேன்னு நினைச்சேன் தனம்மா, அது உண்மைன்னா நீ இந்த நிக்காக்கு சம்மதிக்கணும் தனம்!"

"இல்ல ஆண்ட்டி, உங்களுக்கு குழந்தைங்க மனசு தெரியல, அவங்க அம்மாவும் இல்லாம அப்பாவும் வேற கல்யாணம் பண்ணிட்டா அவங்க மனசு என்ன பாடு படும், இல்ல ஆண்ட்டி நான் இந்த தப்ப பண்ணமாட்டேன். அஜய் இப்ப பெரியவனாகிட்டான் அதனால நாங்க ஒண்ணா இல்லேன்னா பரவாயில்ல, ஆனா அந்த குழந்தைங்க என்னோட இருந்தாலும் நான் அம்மாவாகிட மாட்டேன் அவங்களுக்கு, அவங்க மனசுல நம்மா அம்மா இல்லேன்னுதான் இருக்கும், ஊகூம் சாரி நான் இந்த தப்ப பண்ணவே மாட்டேன்!"

"என்ன தனம் பேசற, நான் குழந்தைகளையே வந்து உன்கிட்ட பேச சொல்றேன் அப்ப நீ சரின்னு சொல்லுவியா, என் மகன நிக்கா செய்வியா?"

"இல்ல  ஆண்ட்டி உங்ககிட்ட  இந்த மாதிரி பேசற நிலைமைல என்ன அந்த கடவுள் வச்சுட்டாரே, அதுதான் கஷ்டமா இருக்கு, நீங்க அந்த குழந்தைகள ஃபோர்ஸ் பண்ணாதீங்க ஆண்ட்டி."

"ஆனா நினச்சு பார், அந்த குழந்தைக அம்மா இல்லாமையே காலம் முழுக்க இருக்கணுமா?

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.