(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

விட்டுட்டு வந்திருப்பியா?"

"நீ சொல்றதெல்லாம் சரிதான், ஆனா இப்பதான் அவ இல்லியே அத பத்தி இப்ப என்ன?

"இல்ல ஆதூ, உன் பையன், பெண்ணுக்கு என்ன வயசுன்னு தெரியல , ஆனா அவங்ககிட்ட கேட்டு அவங்களுக்கு முழு விருப்பம் இருந்தா ஒழிய

 இந்த கல்யாணம் நடக்காது, ஆதூ."

"உனக்கு அவங்க மகன், மகள் இல்லியா தனம், ஏன் உன் மகள் மகன்னு பிரிச்சு பேசற?"

"சாரி ஆதூ, ஏதோ பேச்சுல சொன்னேன், ஐ அம் எக்ஸ்ட்ரீம்ல்லி சாரி!"

"இட்ஸ் ஓகே, அவங்க ரொம்ப நல்ல பிள்ளைங்க, உனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும், அவங்களுக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும். அவங்க ரெண்டு பேரும், அவங்க அம்மீ மாதிரி இல்ல, அவங்க எங்க வாப்பா, அம்மீ மாதிரி ரொம்ப நல்லவங்க, உன்ன கண்டிப்பா ரொம்ப பிடிக்கும். உன்னை, யாராவது வேணாம்னு சொல்லுவாங்களா?"

அவள் சிரித்துக் கொண்டே, "அதெல்லாம் நல்லாத்தான் பேசுவ."

"சரி இப்ப வந்து என் பக்கத்துல உக்காறேன், ப்ளீஸ்"

 

"இல்ல ஆதூ நான் இங்கயே இருக்கேன், பரவாயில்ல."

"உனக்கு என் மேல மனசு வருத்தமா, தனம்? என்னன்னு சொன்னேன்னா நான் மாத்திக்கறேன் தனம், ப்லீஸ்டா!"

"அதல்லாம் ஒண்ணுமில்ல ஆதூ, கொஞ்சம் வருத்தம், என்னன்னா நீ இன்னொருவரின் கணவன், ரெண்டு குழந்தைகளுக்கு தந்தை, அது எனக்கு வருத்தமா இருக்கு ஆதூ, மனசு முள்ளா குத்துது. "

பெட்டிலிருந்து எழுந்து அவளருகில் சென்றான். அவளிடம், "ஏண்டா இப்படி பேசற? நீ தான் முதல்ல என்னோட மனைவி, பிறகுதாண்டா அவ!"

"உனக்கு வெக்கமாயில்ல ஆதூ, நான் உனக்கு முதல்ல மனைவின்ற, எப்படிடா, நீ என்ன கல்யாணம் பண்ணிண்டியா? வெறும் குழந்தையை பெத்துண்டா மனைவியாயிடுவேனா? அப்படியே நீ சொன்ன மாதிரியே நான் முதல்ல மனைவின்னா, வேறொரு பெண்ணை எப்படி கல்யாணம் பண்ண நீ?"

"சாரி சாரி! நான் என்னவோன்னு நினைச்சேன்.  உனக்கு, நிஜமாவே என் மேல கோவமில்லன்னு நினைச்சேன். ஆனா உன் மனசுல இவ்வளவு கோவம் வச்சிருக்க என் மேல, காலைல பேசும்போது நீ சாதாரணமா பேசின, உன் மேல மட்டும் தப்பில்ல, என் மேலயும்தான் தப்புன்னே, இப்ப வேற மாதிரி பேசற?"

"கரெக்ட் பேசினேன்தான், அதை இப்பவும் ஒத்துக்கறேன் ஆதூ, ஆனா பாதிக்க பட்டது நான்

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.