(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

மட்டும்தான நீ இல்லியே? என்னை மறந்து கல்யாணம் பண்ணிண்டு  குடும்பத்தோடு வாழற, என் குழந்தை பிச்சை எடுத்து வாழ்ந்திருக்கான்."

"போதும் தனம் அது நடந்து போன விஷயம், அதையெல்லாம் இப்ப சரி செய்துடலாம் தனம், நம்ம குழந்தைக்கு ஒரு முகவரி கொடுக்கணும், அது நீ ஒத்துண்டாதான் நடக்கும். நாம ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் இல்ல அதையும் தாண்டி இப்ப கணவன் மனைவியா நம்ம குழந்தைக்கு நல்ல எதிர்காலம் கொடுக்கணும். ப்ளீஸ் நீ  என்னோட ஒத்து போகனும் இதுக்கு மட்டுமில்ல இனி வரும் எதிர்காலத்துக்கும் நாம ஒத்து போய் நம்ம குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கொடுக்கணும். அது அஜய் மட்டுமில்ல நம்ம இம்ரான், சாய்ராக்கும் கூட நல்ல எதிர்காலம் கொடுக்கணும், அதுக்கு உன்னோட ஹெல்ப் வேணும் எனக்கு செய்வியா?"

"இம்ரான், சாய்ரா எப்படி?"

"நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, குழந்தைங்க ரெண்டு பேரும் என் வாப்பா, அம்மீ மாதிரி தனம்,குணத்துல தங்கம், உனக்கு ரொம்ப பிடிக்கும் தனம், நாம நிக்கா செய்ஞ்சுப்போம், ப்ளீஸ்?"

"ஆதூ, இப்ப ஒரு முடிவுக்கு வரணும், பார்ஸ்ட் நீ புரிஞ்சுக்க வேண்டியது, நாம ரெண்டு பேரும் வேற வேற மதம், என்ன உன்னோட மதத்தை ஏற்க சொல்லுவியா? என்னால அது முடியாது ஆதூ, நீ பிரெண்டா இருக்கறது வேற,  ஆனா கல்யாணம்னா வேற புரிஞ்சுதா? இப்ப நீ பேசச்சேயே உன்னோட மதம் எந்த அளவு உன் ரத்தத்துல கலந்திருக்கு தெரியறது. நாளைக்கு உன் சொந்தக்காரங்க வந்து தலையிட்டு உன் மனைவியை மாரச் சொல்லுன்னு சொன்னா என்ன செய்வே, என்னை மதம் மாருன்னு ஃபோர்ஸ் பண்ணேன்னா?"

"என்னை என்ன அவ்வளவு கீழ் தரம்னு நினைச்சியா, அவ்வளவு தான் நம்ம பிரெண்ட்ஷிப்பா தனம், நீ என்ன புரிஞ்சுண்டது  அவ்வளவுதானா? என்னால நம்பவே முடியல? என் தனம்தானா இது? மனசு ரொம்ப கஷ்டமாயிருக்கு தனம்."

"இல்ல ஆதூ, இப்ப என் அஜய்க்காக இந்த கல்யாணத்த பண்ணிண்டு நாளைக்கு நாம திரும்பி டைவர்ஸ் அது இதுன்னு நம்ம வளர்ந்த பசங்களுக்கு எதிர்ல நின்னோம்னு வச்சுக்க ரொம்ப அசிங்கமாயிருக்கும், அதுக்கெல்லாம் நான் தயாராயில்லை. அதான் முன்னாடியே பேசிடலாம்னு சொல்றேன். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பிரெண்ட்ஷிப் வேற, ரிலேஷன்ஷிப் வேற. பிரெண்ட்ஷிப்ல எந்த ஒரு தலையீடும் இருக்காது, நானும் எதுக்கும் கட்டுபட வேண்டாம், ஆனா கணவன் மனைவி உறவுல அப்படியெல்லாம் இல்ல."

"சரி நீ சொல்றதும் சரிதான், இப்போ ஒரு ப்ராமிஸ் பண்றேன், உன்னை உன் இஷ்டத்துக்கு எந்த ஒரு தலையீடும் இல்லாம, எதுவும் கட்டு படுத்தாம, யாரும் நம்ம உறவுல தலையிடாம பார்த்துக்குவேன். திஸ் இஸ் அ ப்ராமிஸ்!"

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.