என்ன, சம்மதம் ராஜா. நீங்க என்ன சொல்றீங்க ஃஜாபர்?"
"நீ என்ன முடிவு செய்தாலும் எனக்கு சரி தான், என் குழந்தைங்க சந்தோஷம்தான் என் சந்தோஷம்!"
“சரி இப்பவே போய் நான் வாங்கவேண்டியதெல்லாம் உடனேயே வாங்கிண்டு வந்துடறேன், வாங்க ஜாஃபர் போலாம்."
"பாட்டிம்மா கவலையே படாதீங்க எல்லாம் வாங்கிண்டு வந்துட்டேன் நான், " அஜய் கூறியதும், தனம் தலை நிமிர்ந்து அவனை பார்த்தாள், "சாரி மாம் நான் எப்படியும் உன்கிட்ட பேசி உன்னோட சம்மதம் வாங்கிடுவேன்னு நம்பிக்கை இருந்தது அதான் அப்பாவையும் கூட்டிண்டு போய் எல்லாம் வாங்கிண்டு வந்துட்டேன். ஐ அம் சாரி, இது ரொம்ப முக்கியம் மாம் ப்ளீஸ் என்கிட்டே கோச்சுக்காத!"
அவள் அப்துலையும் திரும்பி பார்த்தாள். அவன் அவள் பக்கமே திரும்பவில்லை. ஆனால் அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்தான் .
"ஆண்ட்டி, இன்னிக்கு தாலி கட்டிக்கணும்னா ஒன்னு எங்க பேரெண்ட்ஸை கூப்பிடனும், அப்பறம் குழந்தைகள் சாய்ரா, இம்ரான் ரெண்டு போரையும் கூப்பிடனும். அது மட்டுமில்ல அவங்களோட எனக்கு தனியா பேசணும், அப்புறம்தான் இந்த கல்யாணம் இன்னிக்கு, உங்களுக்கெல்லாம் சம்மதம்னு நினைக்கறேன்."
"எனக்கு ஓகே தான்!" அப்துல் சொல்லவும்
நிக்கத்தும், ஜாபரும் ஒருவரை ஒருவர் பார்த்து அவர்கள் கண்ணாலேயே பேசி சம்மதம் புரிந்ததும் நிக்கத், "தனம், நான் நினைச்ச மாதிரியே, நீ ஒரு நல்ல அம்மாவா என் பேரக் குழந்தைகளுக்கு இருப்பேம்மா, ரொம்ப சந்தோஷமாயிருக்கு தனம், குழந்தைகளை இப்பவே வரவழைக்கறேன், என் தங்கம்டா நீ" போன் செய்து அஹமதிடம் குழந்தைகளை கூட்டிக் கொண்டு வா!" என்று கூறினார், நிக்கத்.
"ஏம்மா நிக்கத், நானே போயிருப்பேன் இப்ப அஹமத்திடம் எதுக்கு சொன்ன?"
"ஏங்க, நாம இங்கிருந்து போறதுக்கு பதில் அவனை கூட்டி வர சொல்லலாமே, அதான் சொன்னேன்"
"இல்லம்மா, உனக்கு நான் சொல்ல தேவையில்லை இந்த விஷயம் கொஞ்ச நாளைக்கு வெளியே தெரிய வேணாம், நம்ம சொந்தக் காரங்களை பத்தி நமக்குத்தான் தெரியுமே, இப்ப தனம் ரொம்ப சொன்னதுக்கு பிறகுதான் ஒத்துண்டிருக்கா, இந்த நேரத்துல நம்ம ஆளுங்க பெரிய பிரச்சனை செய்ஞ்சாங்கன்னா, அதான் வேண்டாம்னேன் இரு நானே அவனுக்கு கால் செய்ஞ்சு வேண்டாம்னு சொல்றேன்."
"சரிங்க' ஜாஃபர் குழந்தைகளை தானே கூட்டிக்கொண்டு வருவதாக கிளம்பி சென்றார்.