(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

ஜாபர் இம்ரானையும், சாய்ராவையையும் கூட்டிக் கொண்டு வந்தார்.

அவர்கள் இருவரும் ஜாஃபரையும், நிக்கத்தையும் ஜாடையாக கொண்டிருந்தார்கள், அவர்கள் அஜயை பார்த்தவுடன், தன் அப்பாவை போலவே இருப்பதை கண் கொட்டாமல் பார்த்தார்கள்

"ஏய் என்ன பையாவையே பார்க்கிறியே?"

"பையாவா?" இம்ரான் தன் அப்பாவை பார்த்தான்.

"ஆமாம் பையாதான், இவ்வளோ பெரியவனான்னு பார்க்கறீங்களா?" ஆமாம் உங்க பையாதான்"

“"ஹலோ இம்ரான், ஹலோ சாய்ரா! " என்றாள், தனம்.

இருவரும் திரும்பி பார்த்தார்கள், யாரென்று புரியவில்லை, "ஹேய், என் பேர் தனம், நான் உங்க அப்பாவோட ஸ்கூல் பிரென்ட்."

"ஹலோ மேடம், " சாய்ராதான் அவளிடம் பேசினாள், இம்ரான் முழித்துக் கொண்டு நின்றான்.

"ஹாய் இம்ரான் பேசமாட்டியா?"

"இல்.... இல்ல பையாவ பார்த்ததுல ஷாக் ஆயிட்டேன், ஹாய் மேடம் !"

"சரி உங்க ரெண்டு பேரோடையும் நான் கொஞ்சம் பேசனும், என் ரூமுக்கு போலாம் வறீங்களா?"

அவர்கள் இருவரும் தன் அப்பாவையும், பாட்டி தாத்தாவையும் திரும்பி பார்த்தார்கள் மூவரும் ஜாடையிலியேயே போக சொன்னார்கள் .

"வாங்க பயப்படாம வாங்க!" தனம் சாய்ராவின் கையை பிடித்துக் கொண்டு தன் ரூமுக்கு கூட்டிக் கொண்டு போனாள்.

சாய்ராவும், இம்ரானும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக் கொண்டு தனத்தின் பின்னாடியே போனார்கள் .

தன் ரூமுக்கு அவர்களை முன்னாடி போக விட்டாள்.

" உள்ளே வாங்க! " தன் சோபாவை காண்பித்து அவர்களை உட்கார சொன்னாள், தனம்.

"என்ன யாரோ திடீர்னு நம்மோட பேசணும்னு சொல்றாங்களே  என்னவோன்னு குழம்பிண்டிருக்கீங்க இல்ல?"

"......"

"சரி நானே ஆரம்பிக்கறேன், முதல்ல, நீங்க ரெண்டு பேரும், ரொம்ப சின்ன பசங்க எந்த அளவுக்கு சொல்றது எப்படி சொல்றதுன்னு எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு, ஆனா, இம்ரான் உனக்கு ஒரு பத்து பதினோரு வயசு இருக்கும், ஓரளவு புரிஞ்சுப்பேன்னு நினைக்கறேன், உங்க ரெண்டு பேரையும் தனியா கூட்டு பேசறதுக்கு காரணமே யாரோட குறுக்கீடும் இருக்கக்கூடாது, அதான்."

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.