(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"அப்ப நாம கல்யாணம் பண்ணிக்கலாம் ஆதூ, ஆனா என் தங்கச்சிங்க கல்யாணத்துக்கு அப்பறம் வச்சுக்கலாம் என்ன சொல்ற?"

'ஏன் இன்னும் காத்திருக்கனும் தனம், எனக்கு இன்னிக்கே உன்ன நிக்கா செய்யணும் தனம், இனி ஒரு நாள் கூட நான், நீ இல்லாம இருக்க முடியாது தனம் ,யாருக்கும் இப்ப சொல்லவேண்டாம், ஆனா இன்னிக்கே நிக்கா செய்ஞ்சுக்கலாம் , உங்க வீட்ல கூட பிறகு சொல்லிக்கலாம்."

"அது... அது.. வெயிட் பண்ணலாமே ஆதூ..... ப்ளீஸ்?"

"வாப்பாவும், அம்மீயும் வெளியேதான் இருக்காங்க நாளைக்கு காலைல நாம ரெஜிஸ்டர் மேரேஜ் செய்ஞ்சுடலாம், இன்னிக்கே உங்க முறை படி தாலி கட்டிடறேன், என்ன சொல்ற நீ ?"

"ஹேய், எல்லாத்துலயும் அவசர படற?, இது பெரிய டெசிஷன் அது முடிவு பண்ண அடுத்த நிமிஷமே அதுவும் கல்யாணம் பண்ணிக்கோன்னா, கொஞ்சம் ஆற போடு இன்னும் கொஞ்சநாளைக்கு பிறகு பண்ணிக்கலாம், எல்லாத்துலயும் அவசர அவசரமா முடிவுகள் எடுக்க வேண்டாம், ஆதூ"

"இது அவசர முடிவு இல்லம்மா, பத்தொன்பது வருஷம் கழிச்சு முடிவு எடுத்திருக்கோம் ராசாத்தி, இனி ஒரு நிமிஷம்கூட நான் வெயிட் செய்ய முடியாது, ஒவ்வொரு நிமிஷமும் என் மனசு குற்ற உணர்ச்சில செத்துட்டிருக்கேன், இனி உன்ன பாத்ததுக்கு பிறகும் என்னால இனி முடியாது தனம் ப்ளீஸ்"

"என்ன ஆதூ, நீ இவ்வளவு வருஷம் வெயிட் பண்ணவன் இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ண முடியாதா?"

"இரு அஜய கூட்டு கேளு, அவன் என்ன சொல்றான்னு பாரு?"

"ஓ, அவனை செட் பண்ணிட்டியா?"

"ஹேய் அவன் தான் உடனேயே நடக்கணும்னு சொல்லிட்டான். ஏன்னா இனியும் அவன் நேர்மையான பிறப்பாக இருக்கணும்னு நினைக்கறேன் தனம் ப்ளீஸ்மா, நம்ம குழந்தையோட மனச நீ புரிஞ்சுக்கோ?"

"எனக்கு புரியுது ஆதூ ஆனா இவ்வளவு வருஷம் பொறுத்த உனக்கு ஏன் இப்போ அவசரம்னுதான்..... சரி முடிவு பண்ணியாச்சு நம்ம பையன் சொன்னானா அதான் ஒத்துக்கறேன்!" நகர போனவளை இழுத்து தன் கையில் வளைத்து கொண்டு, "என் மேல் கோவமா தனம்?"

"எனக்கு கோவம்லாம் இல்லை ஆதூ, ஆனா நம்ம வாழ்க்கை வேறு வேறு திசைல போயிடுத்து, சின்ன வயசுல தப்பு நடந்துடுத்து, அதை நீ மறந்து உன் வாழ்க்கையில் செட்டில்

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.