(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"ஹ்ம்ம், மூடுக்கு வந்துட்ட போல இருக்கு?' சரி பரவாயில்ல சொல்லு விஷயம் என்னன்னு?"

"வந்து நீ அங்கேயே இரு, குழந்தைகளோட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணு அவங்கள நல்லா பார்த்துக்க, குழந்தைங்க மனசு பூபோலது ஆது, அவங்க நம்ம அண்டி இருக்கறது ஸ்கூல் வரைதான் பிறகு அவங்க லைஃப் மாறிடும் , அதனால குழந்தையா இருக்கிறப்போ எவ்வளவு அன்பு கொடுக்கறோமோ அது நல்லது, அதே நேரம் கண்டிக்க வேண்டிய நேரத்துல கண்டிக்கறதும் முக்கியம், அது எப்பவும் ஒரு  அம்மாவாலத்தான் முடியும், இப்போ அவங்களுக்கு அம்மா இல்லாததால..."

"யார் சொன்னா அவங்களுக்கு அம்மா இல்லேன்னு, இதோ அவங்க அம்மா" என்று அவள் கையை தொட்டு காண்பித்தான்.

"நான் அவங்க அம்மாதான், ஆனா என்ன இருந்தாலும் சொந்த அம்மா மாதிரி ஆகுமா, ஆது?"

"அதுக்கு மேலயே நீ, எனக்கு மட்டுமில்ல, அம்மீ வாப்பாவும் அப்படித்தான் நினைச்சுக்கிட்டிருக்காங்க, இனி மூணு பேரும் நம்ம ரெண்டு பேர் குழந்தைக, அவர்களுக்கு நாம ரெண்டு பேர் தான் பெத்தவங்க, அதனால இனி இத பத்தி நாம பேசவேணாம்."

"சரி ஏதோ பேசி என் வாய அடைச்சுட்ட!"

"நாம ஒன்னு செய்யலாமா?"

"சொல்லு?"

"நாம எங்கியாவது போயிடலாம், எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்."

"அது முடியாது ஆதூ"

"ஏன் தனம்?"

"நம்ம அஜய் மெடிசின் படிச்சிட்டிருக்கான் ஆதூ, அவனை பிரியமாட்டேன் நான், என்னால் முடியாது ஆதூ!"

"சாரிடா, நான் கேட்டிருக்க கூடாது, நீ சொல்றது கரெக்ட், சரி பார்ப்போம், அதுக்காக நிக்கா ஆனதுக்கு பிறகு பிரிஞ்சு இருக்கணும்னு சொல்ற, அதுக்கு எதுக்கு நிக்கா சொல்லு?"

"கரெக்ட் ஆதூ, ஆனா நீ உங்க அம்மா அப்பாவை விட்டு விட்டு வரது எனக்கு பிடிக்கல, பாவம் அவங்களுக்கு நீயும் அந்த பசங்களும்தான் ஒரு பிடிப்பு, இல்லேன்னா ரொம்ப போரிங் ஆயிடும், அங்கிளுக்காவது பரவாயில்லை ரெக்கார்டிங் தியேட்டர் போயிடுவார், ஆனா ஆண்ட்டிய நினைச்சு பார்."

"தனம் யோசி, நிக்காக்கு பிறகு உன்னையும் அஜயும் பிரிஞ்சு இருக்க முடியாதும்மா என்னால."

நாம இங்க ஒன்னாத்தான் இருக்க போறோம், எப்ப வேணா பார்த்துக்கலாம், நீ என்ன டெய்லி வந்து பிக்கப் அண்ட் டிராப் பண்ணு அப்புறம் நாம வீகெண்ட்ஸ்ல ஒண்ணா இருப்போம்,

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.