"ஏய் யாரா இருந்தா நமக்கென்ன, அவங்க ரொம்ப நல்லவங்க, அவங்கள பத்தி ஒன்னும் பேசாத! " என்று பேச்சை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்.
"என்ன ஆது, ஒன்னும் பேசமாட்டேன்ற? "
"ஒண்ணுமில்லடா பேச, உன்னோட இந்த மாதிரி போறதே ஒரு சுகமா இருக்கு அதைத்தான் என்ஜாய் பண்ணிடிருக்கேன்."
"ஐயாக்கு புது கல்யாணம், புது பொண்டாட்டின்ற மோகம் அதான் இப்படிலாம் டையலாக்லாம் பேசற!"
"ஏய் இந்த மோகம் கடைசி வரை இருக்கும்டா, நான் எப்படி இப்போ பீல் பண்றேன் தெரியுமா?"
"ம்ம் .... தெரியும் அத தான் பார்த்துண்டிருக்கேனே!"
"புதுசா பொறந்திருக்க மாதிரி இருக்கு தனம், எனக்கு புது ரத்தம் உடம்புல ஊறர மாதிரி இருக்கு."
"ஊறும் ஊறும், அய்யாக்கு இள ரத்தமில்லயா புது ரத்தம் ஊறும் !"
"ஹாஹா, என்ன கிண்டலடிக்கிறியா?"
"ஐ அம் ஹாப்பி டூ ஆது;"
"இன்னிக்கு மதியமே புரிஞ்சுண்டேன், தனம் இனி எல்லாத்தையும் மறந்து புது லைஃப் ஸ்டார்ட் பண்ணலாம், நீ மனசுல எதையோ நினச்சு இனி வர போற சந்தோஷத்தை தடை பண்ணாத, தனம்மா!"
அவள் வாய் திறக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், அவனுக்கு உறுத்தவே திரும்பி பார்த்தான் "ஏய் என்ன, என்ன அப்படியே பார்க்கற? மேடம்க்கு மூடா, உன் புருஷன் எப்படியிருக்கான் சொல்லு?"
"என் புருஷனுக்கு என்ன, கொள்ள அழகு, ஆண் அழகன், என் மகனை போல!"
"பாருடா என் மகன் என்ன போல, நீ என்ன நான் உன் மகன் போலன்னு சொல்ற? "
"ஏன் நான் சொன்னது தப்பா?"
"இல்லடா நீ சொன்னா தப்பே கிடையாது, ஏன்னா, நீ உன் மகனோட கூடவே இருந்திருக்க அதனால என் ஜாடையில அவனை நீ முதல்ல பார்த்திருக்க அதான் நீ அப்படி சொல்ற, எனக்கு புரியுதுடா."
"அட புரிஞ்சுண்டிட்டியே பரவாயில்லடா நீ பொழச்சுப்ப."
"ஹா ஹா" என்று சிரித்து விட்டு... "நான் நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கேன், தனம். "
"நான் கூட ஆதூ, என்னடா நேத்து வரை எப்படி எப்படியோ பேசினவ, இப்ப இப்படி பேசறாளேன்னு நினைக்கற, கரெக்ட்தான"