அம்மாவை விட்டு வர மனசு வரலியா?"
"ஆமாம் அஜய், என் மனைவியை விட்டு வர மனசு வரல, அதான் ஆபிஸிலே வெயிட் செய்து கூட்டிட்டு வரேன், சீக்கிரம் ரெஸ்டாரண்டுக்கு வந்து சேரு, அங்க பேசிக்கலாம் மிச்சத்தை."
"ஓகே டாட்! "
"என்னவாம் என்ன சொல்றான் உன் பையன்?"
"என்ன உன் பையனா, நம்ம பையன், ஒண்ணுமில்ல என்ன அம்மாவை விட்டு வர மனசில்லையா அங்கேயே இருந்துட்டியான்னு என்ன கலாய்க்கிறான் நம்ம அஜய்."
"நம்ப முடியறதா ஆதூ, நமக்கு இவ்வளவு பெரிய மகன், பெரிய தப்புதான் செய்தோம் ஆனா இப்ப பார் நல்ல குடும்பம், நல்ல பசங்க, நல்ல மாமியார் மாமனார், என்ன என் நாத்தனாரத் தான் இன்னும் பார்க்கல, நான் ரொம்ப கொடுத்து வச்சவ ஆதூ."
"ஹேய் என்ன நீ பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசற? " அவள் கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டு "லுக் தனம், நான்தான் ரொம்ப கொடுத்து வச்சவன், அழகு தேவதை உனக்கு என்னடா, எங்க அம்மீயும், வாப்பாவும் கூட கொடுத்து வச்சவங்க தான், நீ சொன்ன மாதிரி நல்ல மனைவி, நல்ல குடும்பம், நல்ல பிள்ளைங்க இதெல்லாம் அமைய ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும், அது எனக்கு இப்ப கிடைச்சிருக்கு, நடுவுல ரொம்ப கஷ்டப் பட்டேன் அமீராவை நிக்கா செய்ஞ்சேன், ப்ச், நான் மட்டும் கஷ்டப் பட்டா அது அவளுக்கு புருஷன் அது என் தலை எழுத்து, பாவம் எங்க அம்மீயும், வாப்பாவும் கூட ரொம்ப கஷ்டப் பட்டாங்க தனம், அதான் தாங்க முடியல."
"சரி விடு ஆதூ, நடந்தது நடந்து போச்சு, அவங்களும் போய் சேர்ந்துட்டாங்க, இனி பேசி பயனென்ன. கொஞ்சம் யோசிச்சு பார், இம்ரான் சாய்ரா மாதிரி ரெண்டு பசங்கள பெத்து கொடுத்திருக்காங்க, இது போதாதா உனக்கு." அவன் கண்களிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வழிந்தது.
"இப்ப யாரோ ரொம்ப சந்தோஷமா இருக்கறதா சொன்னாங்க இல்ல ஆதூ? அது யாரு?"
"ப்ச், நீ சொல்றதும் சரிதான், அவன் பேர் அப்துல்ன்னு நினைக்கறேன், கரெக்ட் தானே ?"
"ஹஹ ஹா.. "என்று இருவரும் சிரித்தனர்.
"உன் நாத்தனார பார்க்கனும்னே இல்ல? பிறகு ஒரு முறை போய் பார்க்கலாம் அவ இங்க வரமாட்டா, அவங்க வீட்ல விடமாட்டாங்க."
'ஏன்?"
"அதெல்லாம் ஒண்ணுமில்ல, அவங்க ஜாயிண்ட் பாமிலி, எல்லாம் ஒண்ணா நல்ல சந்தோஷமா வாழற குடும்பம், வேலை அது இதுன்னு பிசியா இருப்பா, ஏதாவது பெஸ்டிவல்ன்னா கூட இங்க வரமாட்டா, அம்மீயும், வாப்பாவும் தான் போய் பார்த்துட்டு