(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

வருவாங்க."

"அவங்க பேர் என்ன?"

"அவ பேர் ஆஷிகா"

"பேர் நல்லாயிருக்கு "

"ஹ்ம்ம் நல்ல பேர், என்ன மீனிங் தெரியுமா, 'லவ்வபில்'   அன்பானவள், அதான் அர்த்தம். "

"ஓ அப்படியா?"

"ஹ்ம்ம், நாம பேசிட்டே வந்துட்டோம், அவங்கள்லாம் வந்துட்டாங்களா தெரியலையே?"

காரை பார்க் செய்துவிட்டு ரெஸ்டாரண்ட் வாசல்ல இருந்தான் அங்கிருந்து தன் அம்மீக்கும், அஜய்க்கும் போன் செய்தான்.

நிக்கத், "இதோ வந்துட்டேன் அபூ!"

"சரி அம்மீ!"

"வா உள்ள போகலாம்!" என்று இருவரும் உள்ளே சென்று டேபிள் எடுத்தார்கள்.

அங்கிருந்து அஜய்க்கு போன் செய்தான் "அஜய்  எங்கிருக்க?"

"இதோ இப்பதான் உள்ள நுழையறேன், நீங்க எங்க இருக்கீங்க டாட்?"

"நேர உள்ள வந்துடு, டேபிள் எடுத்தாச்சு!"

"ஓகே டாட் !"

சிறிது நேரத்தில் உள்ளே வந்தான் அஜய். அவர்களை கண்டு பிடித்து அவர்கள் டேபிளுக்கு போய் அம்மாவையும் அப்பாவையும் அணைத்து, ' ஹலோ' கூறினான்.

"என்ன அம்மா, டாட் உங்கள விடவே இல்ல போலிருக்கு இன்னிக்கு?"

"ஹி ஹஸ் எ குட் நியூஸ் !"

'ஓ! என்ன டாட் அது?"

'வெயிட், என் அம்மீ, வாப்பாவும் வந்துடட்டும்!"

"ஓ அவங்களும் வராங்களா? குட்.."

அப்போது எல்லோரும் உள்ளே வந்தார்கள்.

"அஜய் ராஜா எப்படியிருக்க? சொல்லு அபூ, எதோ சொல்லனும்ன என்ன விஷயம்?"

"முதல்ல உக்காருங்க அம்மீ. "

சாயிராவை தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டாள் தனம், பக்கத்தில் அஜயை உட்கார வைத்துக் கொண்டாள், சாய்ராவின் இன்னொரு புறம் அப்துல் அவனுக்கு பக்கத்தில் இம்ரானும் உட்கார்ந்தார்கள், இம்ரானின் பக்கத்தில் நிக்கத்தும், ஜாஃபரும் உட்கார்ந்தார்கள்.

தனம் ஒரு புறமும், அப்துல் ஒரு புறமும் சாய்ராவை கட்டிக் கொண்டிருந்தார்கள்.

"அம்மீ, வாப்பா, நான் வேலையில் சேர்ந்திருக்கேன்."

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.