(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"சரிங்க!" என்று போனை அழுத்தி அவள் நம்பருக்கு கால் செய்த்தார்.

போனை எடுத்த ஆஸ்மாவிடம், "ஆஸ்மா, நான் தான் நிக்கத் அத்த பேசறேன், நீங்க நாளைக்கு வரவேணாம், நாங்க ஏற்கனவே இங்க அபுவுக்கு பொண்ணு பார்த்தாச்சு, நீங்க யாரும் வரவேணாம் சரியா, நான் போன வச்சுடறேன்." சொல்லி அவள் பதிலுக்கு காத்திராமல் போனை வைத்து விட்டார்.

 “சபாஷ் சரியான போட்டி நிக்கத்!”

“இல்லங்க என் மகனுக்கு பெண் பாக்க இவங்க யாருங்க? அதுவும் என்னோட பதில கூட எதிர் பார்காம அவஙகளே முடிவு செய்துட்டாங்க, ரொம்ப மோசம்ங்க.”

அப்துலோட போன் மணி அடித்தது, அவன் குளியலரையிலிருந்து வெளியே வந்து எடுத்தான் “ ஹலோ அப்துல்!”

“ஜி, நான் ஷாகுல் பேசறேன். “

“சொல்லுங்க!”

“ நாங்க நாளைக்கு உங்க ஊருக்கு வரோங்க, அப்படியே உங்கவீட்டுக வரலாம் னு இருக்கோம் ஜீ!”

“நான் இருக்க மாட்டேன், நீங்க என்ன பாக்க முடியாது, பசங்களும் ஸ்கூலுக்கு போய்டுவாங்க.”

உங்க அம்மீ கிட்ட சொல்லீட்டோங்க ஜீ”

“நீங்க யார்கிட்ட சொன்னாலும் நாங்க யாரும் ஃப்ரீ இல்ல நீங்க வேஸ்டா வர வேணாம்.”

“என்ன ஜீ நம்ம பசங்க இம்ரான், சாய்ராக்கு அம்மீ வேணும் ஜீ அதுக்காக நம்ம சொந்தம்  பொண்ணு.”

"உங்க சொந்தம் பொண்ணா?"

"ஆமாம் ஜீ நம்ம சொந்தம் பொண்ணு பார்த்து முடிவு செய்ஞ்சுட்டோம், அதான் நாளைக்கு வந்து எல்லா ஏற்பாடும் செய்ஞ்சுடலாம்னு தான் வரோம் ஜீ?"

"நீங்க யாரு அதல்லாம் செய்ய? எனக்கு பெண்ணெல்லாம் பார்த்து நிக்காவும் முடிஞ்சிடுச்சி நீங்க ஒன்னும் எங்களுக்காக கஷ்டப் பட வேணாம்."

'அதெப்படிங்க எங்களுக்கு தெரியாம நிக்கா, யாருங்க பொண்ணு? அந்த பொண்ணு ஒழுங்கா என் தங்கச்சி பசங்கள பார்த்துப்பாங்களா?"

"அப்படியே உங்க தங்கச்சி அவ பசங்கள பார்த்துண்டா மாதிரி, கவலையே படாதீங்க என் பீவி உங்க தங்கையை விட நல்லா பார்த்து வளப்பா!"

"இல்லங்க நாங்க கண்டிப்பா நாளைக்கு வரோம், உங்களுக்கு உண்மையாவே நிக்கா ஆகியிருந்தா, எங்க பசங்கள நாங்க கூட்டிட்டு வந்துருவோம்."

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.