(Reading time: 8 - 15 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

இன்னும் நிறைய வேலை இருக்கு... ஆனால், நான் வீக் என்ட் வரைக்கும் பிஸி. வெள்ளிக்கிழமை ஈவ்னிங் மேல எல்லாம் செய்யலாம்...”

“ஒரு வாரம் நான் ஒன்னும் செய்யாம வெயிட் செய்ய முடியாது மனோஜ்... நான் என்னால முடிஞ்சதை பார்க்கிறேன்... செய்ய முடியாததை உங்களுக்காக வச்சிருக்கேன்...”

“ரைட்... இன்னைக்கு டின்னரோட நாளைக்கு லஞ்சும் சேர்த்து ஹோட்டல்ல ஆர்டர் செய்திடலாம்... நீ செட்டில் ஆனப்புறம் சமையல் ஸ்டார்ட் செய்தா போதும்...”

மஞ்சுவின் முகம் அந்த செய்தி கேட்டு பளிச்சிட்டது!!!

“சமையல் செய்ய வேண்டாம்னு சொன்னா என் pbs முகத்துல வர ப்ரைட்னஸ பாரு!!!! ஷண்முகம் வேற உனக்கு ஹெல்ப் செய்ய இங்கே பக்கத்துல இல்லை... உன் பாடு கொஞ்சம் கஷ்டம் தான்...” என்று மனோஜ் கிண்டல் அடிக்கவும்... மஞ்சு 'பே பே' என விழித்தாள்!

“எனக்கு உன் ஃபிராட் வேலை தெரியாதுன்னு நினைச்சீயாக்கும்!!!! என் அண்ணன் நள மஹாராஜான்னா, நான் அவன் தம்பி, pbs!”

“அவரே உங்க கிட்ட சொல்லிட்டாரா???”

“இல்லை மஞ்சு, என் அண்ணன் சமையல் எனக்கே தெரியும்... சரி, நீ என் கிட்ட சொல்லலையேன்னு நானும் தெரியாத மாதிரி காட்டிக்கிட்டேன்...”

“சாரி மனோஜ்! எனக்கு சமையல் ரொம்ப தெரியாது... கொஞ்சமா தான் தெரியும்... உங்க அண்ணாவும், வினோவும் இன்னும் கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருக்காங்க... இருந்தாலும் இப்போவும் எக்ஸ்பெரிமென்ட் லெவல் தான்...”

“நீ எக்ஸ்பெரிமென்ட் செய்றது எல்லாத்தையும் ரசித்து சாப்பிட உனக்கே உனக்கா நான் இருக்கேன் pbs...” என்றபடி மனைவியை சுற்றி கைப் போட்டு தன் பக்கமாக இழுத்துக் கொண்டான் மனோஜ்...

மஞ்சுவும் பிகு செய்யாமல் அவனின் அணைப்பை ஏற்றுக் கொண்டாள்...

“நாம இது வரைக்கும் தனியா இருந்ததே கிடையாது pbs...!!! முதல்ல ஆபீஸ்... அப்புறம் உங்க வீடு இல்ல எங்க வீடுன்னு... எப்போவும் நம்மளை சுத்தி அத்தனை பேர் இருப்பாங்க... முதல் தடவையா யாருமே இல்லாத தனிமை... ஐ லைக் இட்...”

மஞ்சு பதில் சொல்லாமல் மனோஜின் அணைப்பு கொடுத்த கதகதப்பை உணர்ந்து அனுபவித்து ரசித்துக் கொண்டிருந்தாள்...

அவளின் உணர்வை உணர்ந்தவனாக அவளின் உச்சியில் இதழ் பதித்தான் மனோஜ்...

மஞ்சு இன்னும் இறுக்கமாக கணவனை அணைத்துக் கொண்டாள்...

இருவரும் தங்களுக்கான பிரத்தியேக காதல் தருணத்தில் மூழ்கி இருக்க, மனோஜின் ஆபீஸ் மொபைல் ரிங் ஆனது!

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.