Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 47 - 93 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Neeyillaiye ini naanillaiye uyir neeye
Pin It

தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 13 - சசிரேகா

ப்போதடா கான்வெனட் வரும் என பாரதி தவித்துக் கொண்டிருந்தான். சக்திக்கும் பாரதியின் மீது பரிதாபமே எழுந்தது. டிரைவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை ஆனாலும் கருணாகரனுக்கு உடல்நிலை சரியில்லை என தெரிந்த காரணத்தால் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை, ஒருவழியாக கான்வென்ட் வரவும் பாரதியும் சக்தியும் நிம்மதியானார்கள், கான்வென்ட்டைக் கண்டதும் கருணாகரனும் வாயை மூடினார். அவரின் அறிவுரைகளை கேட்டபடி வந்திருந்த சக்தியை கிண்டலாக பார்த்து சிரித்த பாரதி

என்ன சக்தி அறிவுரை எல்லாம் பலமா இருக்கு போல

ஆமாமாம் உங்களையும் நல்லா திட்டினாரே கவனிக்கலையா பாரதி

அவர் என்னை திட்டலைம்மா, கார்த்திக்குன்னு எவனோ ஒரு படுபாவியை நினைச்சி என்னை திட்டினாரு ஆனா, நீ அப்படியில்லையே இவ்ளோ நேரம் உனக்கு சொன்ன அறிவுரைகளை நீ மதிச்சி நடக்கனும், இல்லைன்னா என்னை போல அவர் உன்னையும் திட்டுவாரு

அதை எல்லாம் நான் பார்த்துக்கறேன் பாரதி, அவருக்கு என் மேல அன்பு அதிகம் என்னை திட்டமாட்டாரு

அதுவும் சரிதான் உனக்கும் சேர்த்து என்னை திட்டி வைப்பாரு நோ ப்ராப்ளம், பார்த்துக்கலாம் இங்க பாரு கான்வென்ட், எவ்ளோ பெரிசா இருக்கு இங்கதான் நீ வேலை செய்யனும்

ஆமாம் பாரதி இதுவரைக்கும் எனக்கு இந்த டீச்சர் வேலையில அனுபவம் இல்லை எப்படித்தான் இங்க வேலை செய்யப் போறேனோன்னு தெரியலை, கவலையா இருக்குஎன கவலைக் கொள்ள அதற்கு பாரதியோ

அதான் டீச்சர் வேலையை பத்தி இவ்ளோ நேரம் சார் உனக்கு அறிவுரை சொன்னார்ல அதை வைச்சி வேலை செய், ஒரு தப்பும் வராது அப்படியே வந்தாலும் அதை சரியாக்கிடற அளவுக்கு உன்கிட்ட திறமையிருக்கு சக்திஎன சொல்ல அவனின் பேச்சைக் கேட்டு தன்மீதே நம்பிக்கைக் கொண்டாள் சக்தி.

எப்படியோ உனக்கு ஒரு நல்ல இடம் கிடைச்சிடுச்சி, இங்க நீ சந்தோஷமா இருப்ப இங்க இருக்கறவங்க யாரும் உன்னை மட்டம் தட்டமாட்டாங்க, அவமானப்படுத்த மாட்டாங்க சக்தி

உண்மைதான் பாரதி ஆனா உங்களை நினைச்சாதான் எனக்கு கவலையா இருக்கு

என்னை நினைச்சா ஏன் சக்தி

நானாவது பரவாயில்லை, இங்க டீச்சரா வேலைக்கு வந்துடுவேன் நீங்க முழுநாளும் சார்கூடவே இருக்கனுமே, உங்களால முடியுமா ரொம்ப கஷ்டப்படுவீங்க பாரதி அதை நினைச்சாதான் கவலையாயிருக்குஎன சொல்ல பாரதியின் பார்வை கருணாகரனின் மீது விழுந்தது. சக்தி சொன்னது உண்மைதான் கருணாகரனுடன் இருக்க வேண்டும் என்ற

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Latest Books in Chillzee KiMo

  • Devathaiyai kanden kadhalil vizhunthenDevathaiyai kanden kadhalil vizhunthen
  • Kandathum kadhalKandathum kadhal
  • Kadhal deiveega raniKadhal deiveega rani
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Muppozhuthum un ninaiveMuppozhuthum un ninaive
  • Manathil uruthi vendumManathil uruthi vendum
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 13 - சசிரேகாAdharvJo 2021-05-13 19:32
Family-a oru type ah irukanga le :Q: ivanga son ah?? Illai ivanga son kk ethavdhu agidicha?? Karuna sir nadikuraro??? Thitinalum Bharatiya nalla pathukuraru....Revathi vida he cares abt Bharathi?? Appadi en than irukkumo :Q: aunty pasa mazhai semma 😍😍😍 Bharathi ethukku ivalo emotional agitaru??? Cute update ma'am 👏👏👏👏 👏👏👏👏👏 mystry therinjika waiting.

Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 13 - சசிரேகாmadhumathi9 2021-05-12 18:15
:clap: nice & cute epi sasi :-) paasamana epi vaazhtugal :grin: eagerly waiting 4 next epi. :thnkx: :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 13 - சசிரேகாmadhumathi9 2021-05-12 16:48
wow 28 pages :grin: :D :thnkx: :thnkx: sasi :GL:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

NAI

KiMo

PVOVN2

PMM

KTKOP

VTV

IOK

SNSN

EEKS

KET

KKP

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top