Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 16 - 32 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pon maalai mayakkam
Pin It

தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 33 - பிந்து வினோத் 

தேங்க்ஸ் விஜயன். நான் செலக்ட் செய்தாச்சு!” என்றபடி கையில் இருந்த உடைகளை காட்டினாள் அதித்தி.

“பரவாயில்லையே, இவ்வளவு சீக்கிரமா செலக்ட் செய்திருக்க...” என்ற விஜயனின் கண்கள் அதித்தி காட்டிய உடைகள் மீது விழுந்தது. அந்த விழிகளில் அதிருப்தியின் செயல் தோன்றியது!

“நான் தான் சொன்னேனே விஜயன், லேட் ஆகாதுன்னு... ப்ரியாக்குன்னு சொன்னேனே அதனால நீ வருவீயோ, மாட்டீயோன்னு பார்த்தேன்... சரி வா பில் போட்டுட்டு கிளம்பலாம்...”

விஜயனின் பார்வை மீண்டும் அதித்தி கையில் இருந்த உடைகள் பக்கம் சென்றது. பளீர் சிகப்பு நிறத்தில் மிகையான வேலைப்பாடுகளுடன் அழகாக இருந்தது அந்த டாப்ஸ். அதற்கு ஏற்றதுப் போல பேன்ட்ஸும் க்ரீம் நிறத்தில் பல வேலைப்பாடுகளுடன் இருந்தது.

பொதுப்படையாக பார்த்தால் அந்த உடையில் குற்றம் சொல்ல இயலாது. அழகாக தான் இருந்தது!

ஆனால், பிறைநிலாவிற்காக வாங்கும் உடை என்ற விதத்தில், அது பொருந்தாமல் விஜயனின் மனதை உறுத்தியது.

“உன் ஃபிரென்ட்க்கு தெரியாம வந்திருக்கேன்னு சொன்னீயே. எதுக்கு இந்த ஸ்பெஷல் ஷாப்பிங் அதித்தி??? என்னமோ சொன்ன, எனக்கு மறந்திருச்சு...”

“ப்ரியாவோட பர்த்டேக்கு விஜயன்! நாளைக்கு அவ பர்த்டே. சீக்கிரம் வாங்கினா நான் உளறிக் கொட்டிடுவேன், அதுக்கு தான் இந்த லாஸ்ட் மினிட் பர்சேஸ்...”

“ஒ, ரைட், ரைட்... சொன்ன...”

“ப்ரியாக்கும் என்னோட சாயிஸ் பிடிக்கும்னு நினைக்கிறேன்... அவளுக்கு இன்னும் நிறைய சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்...”

தங்கையின் குதூகலம் விஜயனிடமும் புன்சிரிப்பை வர வைத்தது. மனதில் உறுத்துவதை சொல்வதா வேண்டாமா என்று அவசரமாக பட்டி மன்றம் நடத்தியவன், சொல்லாமல் இருக்க முடியாமல் நேரடியாக பேசினான்.

“சர்ப்ரைஸ்ன்னு சொல்ற... ஆனா உன் ஃபிரென்ட்க்கு பிடிச்சது போல சர்ப்ரைஸ் தரப் போறீயா, இல்ல வேற மாதிரியா?”

“இதென்ன கேள்வி விஜயன்? பர்த்டேக்கு பிடிச்ச சர்ப்ரைஸ் தராம பிடிக்காத சர்ப்ரைஸா தருவாங்க?”

“ஓகே, அப்போ என் ஒபினியன் சொல்றேன்! இந்த சாயிஸ் உன் ஃபிரென்ட் ப்ரியாக்கு செட் ஆகாது. உனக்கு வேணா சரியா இருக்கும்...”

Add comment

Comments  
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 33 - பிந்து வினோத்Annie94 2021-05-22 01:01
Vera level flashback... Story la yaar lead ne therilayee... Too goood.. Eagerly waiting for next update.!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 33 - பிந்து வினோத்AdharvJo 2021-05-15 13:08
Slip of the tongue amam 😜nambitom nambitom vin sir no kadhal manan tiger island😍😍😍😍 but ilavarasi eppadi react pananganu sollamal vittutare 😈😈 cute and cool update ma'am 👏👏👏👏👏👏 adhi mathiri little sis irundha podhum :lol: Look forward to see what happens next
Thank you and happy weekend.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 33 - பிந்து வினோத்madhumathi9 2021-05-15 11:14
wow very nice & cute epi mam.eagerly waiting 4 next epi :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# பொன் மாலை மயக்கம்Srichitra 2021-05-15 09:57
Very nice epi sis
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

NAI

KiMo

PVOVN2

PMM

KTKOP

VTV

IOK

SNSN

EEKS

KET

KKP

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top