This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.
09 அக்டோபர் 2010
நவம்பர் மாதத்தின் ஒரு ஞாயிறு, தினேஷை ஹாஸ்டலுக்கு வெளியில் வந்து காத்திருக்குமாறு சொன்னாள் ரம்யா. அவள் தலைகுளித்து, காரிடாரில் நின்று ஈரம் உலர்த்தும் போதே, தினேஷ் அங்கு நிற்பதைக் கண்டாள். அவசர அவசரமாக உடை மாற்றிக் கிளம்புகையில் முக்கிய அறிவிப்பு. ஹாஸ்டல் டைனிங் ஹாலில் அறைகளில் தங்கியிருக்கும் பெண்கள் அனைவரும் கூட வேண்டும் என்று மைக்கில் சொல்லவும், அவளையும் சிஸ்டர் வெளியேற விடாமல் தடுத்து டைனிங் ஹாலில் அமர வைத்தார் ஹாஸ்டலுக்கு வெளியே தினேஷ் காத்திருக்கும் கவலை அவளுக்கு. அந்த கான்வென்டில் புதிதாக சேரவிருக்கும் கன்னியாஸ்திரிகளுக்கான சிறப்பு அறிமுக விருந்து அன்றைய தினத்தின் இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அறிவித்து, ஹாஸ்டலின் புதிய வசதிகள், வரவுகள் என்று பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தனர். ஒன்றரை மணி நேரம் ஓடியது. கூட்டம் முடிந்த நொடியில் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வாசல் நோக்கி ஓடினாள். அங்கு தினேஷைக் காணாமல் தவித்தவளை, “என்னையவா தேடுற உனக்குள்ள வச்சிட்டே!” என்று பின்னாலிருந்து வந்தான் தினேஷ்.
“ரொம்ப லேட் பண்ணிடாங்க மீட்டிங் வச்சிட்டு, கிளம்பி போயிடுவியோன்னு பயந்துட்டே இருந்தேன். அதெப்படி உன்னைப் பார்க்காமல் போவேன்? ”என்றான். கருப்பு வெள்ளை நிறத்தில் எளிமையான உடையில் கூட தேவதை போல அவன் கண்ணில் தெரிந்தாள் அவள். சரி ஒரு முக்கியமான விஷயம் பேசணும், அதை இங்கே நின்றுகொண்டே பேச வேண்டாம்.இன்னும் நீ சாப்பிடல தானே, என்றவாறே அவனுடன் ரெஸ்டாரண்டில் நுழைந்தாள். உணவுடன் தேநீரும் ஆர்டர் செய்தவள், பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டே உணவருந்தினர். தேநீர் வந்ததும் அதை அருந்திக் கொண்டே, ஒரு விநாடி நிதானித்து, “தினேஷ் நாம் கல்யாணம் பண்ணிக்கலாமா?" ரம்யா தேநீர் கோப்பையை மேசை மேல் வைத்தவாறே தினேஷிடம் கேட்டாள். அவளின் அந்தக் கேள்வியில் ஆச்சரியப்பட்ட தினேஷ், "எப்படி ரம்யா? நம்ம இரண்டு பேர் குடும்பத்திலும் நம்ம காதலைத் தான் யாரும் இதுவரை ஏத்துக்கலையே! அவங்க சம்மதத்துக்குத் தானே இவ்வளவு நாளா நாம காத்துட்டு இருந்தோம்?"
நீ எப்போ என்கிட்ட, காதலை சொன்ன தெரியுமா, 2003 ல, இப்ப 2010. வெயிட் பண்ணது போதும் தினேஷ்! நாம கிட்டத்தட்ட 7 வருஷமா காதலிக்கிறோம். இன்னும் நம்ம காதலையும் நம்ம மனஉறுதியையும் அவர்கள் நம்பலனா, அது அவங்க பிரச்சினை. இனிமேல் நம்ம வாழ்க்கையை இப்படியே நடத்த முடியாது. எவ்வளவு நாள் நாம இப்படியே பிரிஞ்சு வாழ்றது டா! படிச்சாச்சு, வேலைல சேர்ந்தாச்சு, இன்னும் என்ன வேணும். இந்த காலத்திலும் ஜாதி
This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Thank you.