(Reading time: 10 - 20 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

ஒரே வீட்ல ஒண்ணா இருக்கலாம்.! எளிதாகச்  சொல்லிவிட்டாள்.

அவளின் திட்டமும் சிந்தனையும் அவனுக்கும் பிடித்திருந்தாலும், குடும்பத்தாரின் சம்மதத்திற்குக் காத்திருந்த அவர்களின் இத்தனை வருடக் காத்திருப்பு வீணானதே என்றும் தோன்றியது. உன் அம்மா அப்பாகிட்ட இன்னிக்கே இந்த முடிவை நீ சொல்லப் போறியா ரம்யா என்றவனிடம், நிச்சயமா சொல்லப் போறேன், நீயும் உன் அண்ணன்கிட்ட இன்னிக்கே  சொல்லு.  என்ற ரம்யா, மேலும், “தினேஷ்! நாம என்ன சொன்னாலும், அவர்கள் யாரும் நம்ம திருமணத்தை ஒப்புக்கொள்ளப் போவதில்லை. ஆனால் நாம் இதைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருக்காமல் நம் வாழ்க்கையை ஆரம்பிப்போம். நான் ஹாஸ்டலில் இருந்து வெளியேறி உன் அறையில் மாறனும்ல. அப்புறம் அதுக்கேத்த மாதிரி ஏற்பாடுகளைச் செய்வோம்டா!” என்றாள்.

“எனக்கு என்னனு தெரில,ஒரே நேரத்துல சந்தோசமாகவும் இருக்கிற மாதிரியும், வருத்தமாகவும் இருக்கிற மாதிரியும், எனக்கு கலவையான உணர்ச்சிகளா இருக்கு ரம்யா, நமக்குக் கல்யாணம்னு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, ஆனால் நம்ம  குடும்ப உறுப்பினர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் நாம எப்படி நம்ம  திருமண வாழ்க்கையை தொடங்கப் போகிறோம் என்ற கவலையும் இருக்கு!”  என்றான் தினேஷ்.

எல்லாம் சரியாகிடும் தினேஷ் என்கிறாள் ரம்யா.

அந்த மாதம் முழுதும் திரும்பத் திரும்ப இருவரும் அவரவர் வீட்டில் சொல்லி சம்மதம் கேட்டனர். ரம்யா தானே திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னதற்கும், “எங்கே கல்யாணம் பண்ணித் தான் பாரேன்!” என்று மிரட்டலான பதில் தான் வந்தது. அவர்கள் என்ன பேசிப்பார்த்தும் இருவரின் வீட்டிலும் ஒத்து வரவில்லை.

18 நவம்பர் 2010

எனவே.அவர்கள் திட்டமிட்டபடி, ரம்யாவும் தினேஷும்  நவம்பர் 18 ஆம் தேதி நண்பர்கள் துணையுடன் ரிஜிஸ்ட்ரார் ஆபீஸில் எளிமையாகத் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ரம்யா மெரூன் நிறத்தில் ஒரு கைத்தறி காட்டன் சேலை அணிந்து மிகக் குறைவான ஆபரணங்களில் அவள் எளிமையான அழகில் அவனை பிரமிக்க வைத்தாள். தினேஷ் தூய வெள்ளையில் கைத்தறி காட்டன் வேட்டி சட்டை அணிந்து கம்பீரமாக இருந்தான். ரம்யாவுக்கு அவனைப் பார்க்கப் பரவசமாக இருந்தது. அவனைக் கரம்பிடிக்க போகும் உற்சாக மிகுதியில் இருந்தவளுக்கு, இன்ப அதிர்ச்சியாக வந்தனர் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த இருவர்.  சென்னையில் கல்லூரிப் படிப்பில் சேர்ந்த அவளின் தம்பி ரகுவும் வந்திருக்க, கல்லூரியில் அவள் அண்ணனாக நினைத்த ரஞ்சன் இவர்களின் திருமணத்திற்காக ஹைதராபாத்திலிருந்து வந்திருந்தான்.பெண் வீட்டாராக  அவளின் சார்பில்

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

8 comments

  • மிக்க நன்றி தோழி :thnkx: பெத்தவங்க சம்மதிப்பாங்கன்னு எவ்வளவு காலம் காத்திருக்கிறது. சில நேரம் பெத்தவங்க புள்ளைங்க விருப்பத்தை சமூகம் என்ன சொல்லும்னு யோசிச்சிட்டு என்ன முடிவெடுக்கவென்றே தெரியாமல் காலம் கடத்துவாங்க. என்ன பண்றது இப்படி சூழ்நிலைல :Q:
  • Ivanga parents kitta sollittu seithu irukalam..unga ishtam solla matanga than but donno what to say however their call on adopting the kids was awesome :hatsoff: interesting flow ma'am 👏👏 👏👏👏👏👏 avanga love and trust ippadi irukatum eppome...and.hope their parents don't disturb them.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.