போவதற்கு முன்னாடி ரெண்டு பெக் ஊற்றிக் கொண்டு போனால் சற்று தெம்பாக இருக்கும் என்று முடிவு செய்தவராய் தன் காரை நோக்கி நடந்தார்.
கார்க் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த்தும் டாஷ் போர்டை நீக்கி அதனுள்ளிருந்த வெளிநாட்டுத் திரவத்தை எடுத்தார். அதைப் பார்க்கும் போதே அவர் நாக்கில் ஜலம் ஊறியது.
லேசான புன்னகையுடன் அதை “கபுக்...கபுக்” கென்று வாய்க்குள் கொட்டிக் கொண்டார்.
சூடான திரவம் தொண்டை வழி இறங்கி ரத்த நாளங்களில் பரவி ஒருவித துள்ளலை அவரது தேகத்திற்குத் தர தலையை வேகமாய் ஆட்டி சிலுப்பிக் கொண்டார்.
“ஓ.கே!...இனி போய்ப் பார்த்துட வேண்டியதுதான்!”
காரைக் கிளப்பினார். அது “விஸ்வா டவர்ஸ்” காம்ப்ளக்ஸை நோக்கி சீறிப் பாய்ந்தது.
மேலுலகில் சித்ரகுப்தன் தயாரானான்.
தொடரும்...
Next episode will be published on 22nd June. This series is updated weekly on Tuesdays.