(Reading time: 9 - 18 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

இருப்பான்!...போதுமா?” என்றார்.

அவள் “கல...கல”வென்று சிரித்து விட்டு, “என் மகனுக்கு இப்போதே நான் சோறு ஊட்டுவேன்” என்று சொல்லி விட்டு, முரளியை சோபாவில் அமர வைத்து விட்டு, தானே சமையல்கட்டிற்கு ஓடிப் போய் ஒரு தட்டில் இட்லி எடுத்து வந்தாள்.

முரளி அப்பாவியாய் தங்கவேலுவையும், முதலாளியையும் பார்க்க, இருவரும் “ம்...சாப்பிடு” என்று சன்னக் குரலில் சொல்ல,

அந்தப் பெண் ஊட்டுவதை வாயில் வாங்கிக் கொண்டான்.

தங்கவேலுவைத் தனியே அழைத்து போர்ட்டிகோ நோக்கிச் சென்ற முதலாளி,  “இந்தப் பையனோட குடும்பம்?” கேட்டார்.

“அம்மாவும் ஒரு தங்கச்சியும் மட்டும்தான்...இப்ப அவங்க எங்க வீட்டுல இருக்காங்க!” என்றார் தங்கவேலு.

“ம்ம்ம்...பயல் படிச்ச பயல் தானே?”

“ஆமாங்க முதலாளி!...சூடாமணி ரைஸ் மில்லுக கணக்கு வழக்கு பார்த்திட்டிருந்தவன்தான்”

“அப்ப சரி...நம்ம கோயமுத்தூர் பிராஞ்ச்ல அக்கௌண்டெண்டா போட்டுடலாம்!...”என்றவர் திரும்பி ஹாலுக்குள் பார்த்து விட்டு, “என் மனைவி முகத்துல இத்தனை வருஷம் கழிச்சு இன்னிக்குத்தான் சந்தோஷத்தைப் பார்க்கிறேன்!... இது நீடிக்கணும்!ன்னா...அந்தப் பையனை அவ பார்த்துக்கிட்டே இருக்கணும்!...பேசாம அந்தப் பையனை குடும்பத்தோட வந்து நம்ம பங்களாவுக்குப் பின்னாடி இருக்கா அவுட்ஹவுஸில் தங்கச் சொல்லிடலாமே?”

“தாராளமாய் தங்க வெச்சிடலாம் முதலாளி!...நானே அவங்களுக்கு ஒரு வீடு பிடிக்கணும்!னுதான் யோசிச்சிட்டிருந்தேன் இப்ப அதுவும் சுலபமாயிடுச்சு” என்றார் தங்கவேலு.

“அப்ப...அந்தப் பையனை இங்க கூப்பிடு நான் பேசிடறேன்” என்றார் முதலாளி சிங்கமுத்து.

வீட்டிற்குள் திரும்பிய தங்கவேலு, “முரளி...கொஞ்சம் இங்க வாப்பா...அய்யா ஏதோ சொல்லணும்கறார்” என்றார்.

முரளி வர, அவன் பின்னாலேயே அந்த ஜெகதாம்பாளும் வந்தாள். “எதுக்கு...எதுக்கு என் பையனைத் தனியா கூப்பிடறீங்க?”. சிங்கமுத்துவைப் பார்த்துக் கேட்டாள்.

“அது வந்து...ஒண்ணுமில்லை ஜெகதா...” என்று சொல்லி அவளை நெருங்கி வந்து அவள் தாடையைத் தொட்டுத் தூக்கிய சிங்கமுத்து, “அம்மாடி...உண்மையில் இந்தப் பையன்...நம்ம பையன் இல்லை!....நம்ம மகன் மாதிரியே இருக்கற வேறொரு பையன்” என்று சொல்ல,

திரும்பி முரளியைக் கூர்ந்து பார்த்த ஜெகதாம்பாள், “இல்லை இவன் என் மகன்தான்...அதனால் என்னைத் தேடி வந்திருக்கான்” என்றாள்.

“சரிம்மா...இவன் இனி மேல் இங்கியே நம்ம வீட்டுப் பின்னாடி இருக்கற அவுட் ஹவுஸ்ல

2 comments

  • டிவிஸ்ட்க்கு மேல டிவிஸ்டா போகுது. விறுவிறுப்பு கூடிவிட்டது.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.