(Reading time: 9 - 18 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

ஹாலுக்குள் நுழைந்ததும் அங்கு காணப்பட்ட அலங்கார வேலைப்பாடுகளையும் வைத்த கண் வாங்காமல் பார்த்தான் முரளி. 

“அடேங்கப்பா...இந்த மாதிரி வீட்டை நான் சினிமாவுலதான் பார்த்திருக்கேன்” என்றான் சன்னக் குரலில் தங்கவேலுவிடம்.

அப்போது மாடிப்படிகளில் இறங்கி வந்த கே.பி.எஸ்.டிரான்ஸ்போர்ட் முதலாளி சிங்கமுத்து, வரும் போதே முரளியைப் பார்த்து விட்டு பிரகாச முகத்தோடு, வேகவேகமாய் இறங்கி வந்தார்.

 

அவர் கண்களில் பாசம் பொங்கியது.  உதடுகள் துடித்தன.

வந்தவர் முரளியின் அருகில் வந்து நின்று, “கோ...கு...ல்! கோகுல்” என்று தழுதழுத்த குரலில் அழைத்தவாறே அவன் தோளைத் தொட்டார்.

“முதலாளி!....இந்தத் தம்பி நம்ம கோகுல் இல்லைங்க முதலாளி!.....இவன் பேரு முரளி!...அந்த சூடாமணி ரைஸ் மில்லுக்கு லோடு அடிக்கப் போயிருந்தப்ப இவனை அங்கு பார்த்தேன்!...பார்த்ததுமே உங்களை மாதிரித்தான் நானும் அசந்து போயிட்டேன்!...இந்த தம்பி அந்த ரைஸ் மில்லுல ரொம்பக் கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டிருந்ததைப் பார்த்து...நான்தான்...கோயமுத்தூர் வரச் சொன்னேன்” என்றார் தங்கவேலு.

“ஓ...ஆமாம்!...ஆமாம்!...நம்ம கோகுல்தான் பல வருஷத்துக்கு முன்னாடியே போய்ச் சேர்ந்திட்டானே?” என்று கண்களில் கண்ணீரோடு சொன்ன அந்த முதலாளி சுவற்றில் மாட்டப்பட்டிருந்த தன் மகனின் பிரம்மாண்ட சைஸ் போட்டோவை கூர்ந்து பார்த்து கேவினார்.

அப்போது வீட்டின் பின் புறமிருந்து உள்ளே வந்த முதலாளியின் மனைவி ஜெகதாம்பாள், முரளியைப் பார்த்ததும் ஓடோடி வந்து கட்டிக் கொண்டு கதறினாள்,

“கோகுல்...திரும்பி வந்திட்டியா?...என் ராசா!...எங்களை விட்டுட்டு இத்தனை நாளு...எங்கேடா போனே?...உன்னைப் பார்க்காம நான் எப்படித தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா?”

நிதானமாய் அவளருகில் வந்து, “ஜெகதா...இவன் நம்ம மகன் கோகுல் இல்லை!...வேற பையன்...முரளி” என்றார் டிரான்ஸ்போர்ட் முதலாளி.

“இல்லை...இவன் என் மகன் கோகுல்தான்!...அவன் என்னிக்காவது ஒரு நாள் திரும்பி வருவான்!னு எனக்குத் தெரியும்!...இனி இவனை நான் எங்கேயும் போக விட மாட்டேன்!...விடவே மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டே முரளியை இறுகக் கட்டிக் கொண்டாள் அந்த ஜெகதாம்பாள்.

முரளியோ என்ன செய்வதென்று புரியாமல் நின்றான்.

முதலாளி மீண்டும் அவளிடம், “சரிம்மா...இனி இவன் எங்கேயும் போக மாட்டான்!...இங்கேயே

2 comments

  • டிவிஸ்ட்க்கு மேல டிவிஸ்டா போகுது. விறுவிறுப்பு கூடிவிட்டது.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.