(Reading time: 9 - 18 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

என் மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு...அதனாலதான் உன் கிட்ட “கோயமுத்தூர் பிராஞ்ச்ல வேலை இருக்கு வந்திடு தம்பி”ன்னு சொன்னேன்!” என்றார் தங்கவேலு முரளியிடம்.

“அய்யா...எனக்கு வேலை கிடைத்தால் மட்டும் போதாதுங்க அய்யா!...நாங்க தங்கறதுக்கும் ஒரு நல்ல வீடு கிடைக்கணும்” முரளி சொல்ல,

“அதைப் பற்றி நீயேன் கவலைப் படறே?...உனக்கு வீடு பார்த்துக் குடுக்க நானாச்சு!...வீடு கிடைக்கும் வரை நீயும் உன் குடும்பமும் எங்க வீட்டிலேயே இருக்கலாம்!” என்றார் தங்கவேலு.

“அய்யா...உங்களுக்கு....குழந்தைகள்...?” என்று ராக்கம்மா இழுக்க,

“ம்ம்ம்”...என்று யோசித்தவர்... “ஒரே மகள்...கல்யாணம் ஆகிப் போயிட்டா” என்றார் வேண்டா வெறுப்பாய் முகத்தை வைத்துக் கொண்டு. அவருடைய அந்த முகபாவத்திலிருந்தே அதன் பின்னணியில் ஏதோ பிரச்சினை இருக்கின்றதென்று புரிந்து கொண்ட ராக்கம்மா அதற்கு மேல் அதைக் குடைய விரும்பவில்லை.

“சரி...நீங்கெல்லாம் போய்க் குளிச்சிட்டு...சாப்பிட வாங்க!” என்ற தங்கவேலு முரளியைப் பார்த்து, “தம்பி...நானும் நீயும் ஒரு பத்து மணிக்கு...எங்க டிரான்ஸ்போர்ட் முதலாளி வீட்டுக்குப் போவோம்” என்று சொல்ல,

“சரிங்க அய்யா” என்றான் முரளி.

****

ந்தப் பெரிய பங்களா வீட்டின் முன் தங்கவேலுவின் டி.வி.எஸ்-50 நின்றதும், நிதானமாய் பில்லியனிலிருந்து இறங்கினான் முரளி. 

“இதுதான் முதலாளி வீடுங்களா?” கேட்டான்.

“முதலாளி...வீடில்லை தம்பி....முதலாளியோட மாளிகை!...உள்ளே வந்து பாரு அசந்திடுவே” என்ற தங்கவேலு, கேட்டிலிருந்த செக்யூரிட்டியிடம், “என்ன கோபாலு...சௌக்கியமா?...முதலாளி இருக்கார்தானே?” கேட்டார்.

“ம்...இருக்காருங்க அண்ணே” என்ற அந்த செக்யூரிட்டியின் பார்வை முரளி மீது திகிலுடன் பதிந்திருந்தது.

“என்ன கோபாலு பையனை அப்படிப் பார்க்கிறே?” தங்கவேலு கேட்க,

“நம்ம...சின்ன முதலாளி......கோகுல்...” திணறினான்.

“அதே மாதிரி இருக்காரல்ல?...அதான்...அதுக்குத்தான் நம்ம முதலாளிகிட்டக் கூட்டிட்டு வந்தேன்” என்றவாறே தங்கவேலு வீட்டினுள் செல்ல, பின் தொடர்ந்தான் முரளி.

போர்ட்டிகோவைக் கடக்கும் போது அங்கு நின்றிருந்த நீ.......ளமான காரையும்,  முன்புற

2 comments

  • டிவிஸ்ட்க்கு மேல டிவிஸ்டா போகுது. விறுவிறுப்பு கூடிவிட்டது.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.