(Reading time: 5 - 9 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

எல்லாம் யோசிச்சிருந்தா நானே வேலையை விடுறதுன்னு முடிவு எடுத்திருப்பேனா?”

  

“ஒரு விதத்தில உன் முடிவு எனக்கு அதிர்ச்சியா தான் இருந்தது... கௌரவ் விசா எக்ஸ்டென்ஷன் செய்றது கஷ்டம்னு சொன்னதால அப்படி யோசிச்சீயா pbs?”

  

கௌரவும் அவனின் பேச்சும், பார்வையும் மஞ்சுவின் நினைவில் வந்துப் போனது... கடுப்பான மனதை, மெல்ல அடக்கியவள், கணவனைப் பார்த்து புன்னகைத்தாள்...

  

“அதுவும் ஒரு ரீசன்.. ஆனால் உண்மையில் உங்களை விட்டு தள்ளி இருக்குறது ரொம்ப கஷ்டமா இருந்தது... கல்யாண வாழ்க்கையில விட்டுக் கொடுக்குறதும் ஒரு அங்கம்னு தெரியும்... இங்கே நான் விட்டுக் கொடுக்கலாம்னு நினைச்சேன்... என்னோட இந்த செல்ல முசுட்டு மேனேஜருக்காக இதுக் கூட செய்யலைனா எப்படி? ஆக்ச்சுவலி, சிகாகோல வேலை தேடினேன், சரியா எதுவும் செட் ஆகலை... சரி ரிசைன் செய்துட்டு பொறுமையா வேணும்னா வேலைத் தேடிக்கலாம்னு நினைச்சேன்...” என்றவள், அப்படியே கணவனின் தோளை சுற்றி கைகளைப் போட்டு, அவனின் விழிகளை நேராகப் பார்த்தாள்.

  

“ஐ லவ் யூ, மனோஜ்!” எனக் கிட்டத்தட்ட அவளின் சுயஉணர்வே இல்லாமல் தானாக உதடுகள் முனுமுணுத்தது!

  

அதைக் கேட்டு மனோஜின் கண்கள் பளிச்சிட்டது! தன் மகிழ்ச்சியை வெளிப் படுத்தும் விதமாக காதலை சொன்ன அவளின் உதடுகளை அழுத்தமாக தன் உதடுகளால் மூடினான் மனோஜ்!

  

அதற்காகவே காத்திருந்தவளைப் போல விழிகள் மூடி அவனுள் அடைக்கலாமானாள் மஞ்சு!

  

ஹேய் ஃபிரென்ட்ஸ், ஹாப்பி நியூ இயர்!

   

நியூ இயர் பிறக்கும் நேரத்தில் நம் ஹீரோ, ஹீரோயினை சேர்த்து வச்சாச்சு ;-) அதில் எனக்கு ஒரு சின்ன சந்தோஷம் ;-)

   

அவர்களைப் போல 2022 நம் அனைவருக்குமே சிறப்பானதாக அமையும் என்று நம்புவோம் :-)

    

தொடரும்...

Go to Pottu vaitha oru vatta nila - Part 02 story main page

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.