தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 06 - நவ்யா
“ஜனனி, விஸ்வநாதன் சார்க்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்திருக்காங்களாம். நீ ஒருத் தடவை போய் பார்க்கிறது நல்லது,” என ரபீக் போன் வழியாக ஜனனிக்கு விபரம் பகிர்ந்தார்.
ஜனனிக்கு விஸ்வநாதனை சந்திக்க தயக்கமாக இருந்தது. அவர் சொல்லும் போகாத ஊருக்கு வழி கண்டுப்பிடிப்பது எல்லாம் அவளைப் பொறுத்த வரை நடக்காத ஒரு விஷயம்.
“எங்க மீட்டிங் சரியா போகலை, ரபீக் சார். அவரோட ஸ்பான்சர்ஷிப் கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை.”
“நம்பிக்கை தான் வாழ்க்கை, ஜனனி. விஸ்வநாதன் சார் இன்னும் முடிவெடுக்கலைன்னு தான் எனக்கு நியூஸ் கிடைச்சது. ஒரு பொக்கே வாங்கிட்டு போய் பாரு.”
“சரி சார்.”
...
This story is now available on Chillzee KiMo.
...
் கூட இல்லாமல் தான் ஜனனி விஸ்வநாதனை சந்திக்க மருத்துவமனை சென்றாள்.
அவர் இருந்த அறை விஐபி அறை என்பதால் பர்மிஷன் வாங்கி தான் செல்ல வேண்டும் என்றார்கள். ஜனனி தன் பெயரை சொல்லி விட்டு ரிசப்ஷன் இடத்தில் காத்திருந்தாள்.
ஒரு சில நிமிடங்களிலேயே, “மிஸ் ஜனனி, நீங்க போகலாம்.” என்றாள் ரிசப்ஷனிஸ்ட்.
“அந்த ரூம் எங்கே இருக்கு?”