தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 10 - சசிரேகா
இரவு உணவின் போது கூட மிர்துளா சரியாக உண்ணாமல் சாதத்தில் கோலம் இட்டபடி எதையோ பறிகொடுத்தது போல முகத்துடன் இருக்க அதைக் கண்ட தாத்தாவோ சாப்பிட்டபடியே தன் மனைவியிடம் கண்ஜாடை செய்ய அவரோ அனைவருக்கும் பரிமாறியபடியே மிர்துளாவிடம் வந்து
”அம்மாடி தங்கம் சாப்பிடும்மா”
”எனக்கு பசிக்கலை பாட்டி”
”ஏன் பசிக்கலை சாப்பாடு நலலாயில்லையா” என கேட்க செழியன் உடனே
”பின்ன கன்றாவியா இருக்கு, இதை மனுஷன் தின்பானா அதான் அந்த பொண்ணு சாப்பிடலை போல” என சொல்லிக் கொண்டே சாப்பாட்டை வழித்து எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க அவன் சொன்னத
...
This story is now available on Chillzee KiMo.
...
டி சாதம் போடு ரசம் ஊத்து சாம்பார்தான் சகிக்கலை, ரசமாவது நல்லாயிருக்கா இல்லை பச்சை தண்ணியில மிளகை அள்ளி கொட்டியிருக்காளான்னு பார்க்கிறேன்“
”நான் வைச்ச சாம்பார் சகிக்கலையா உங்களுக்கு”
”ஆமாம் அதனாலதானே எப்படி சாப்பிடறதுன்னு தெரியாம, ஏதேதோ சாக்கு சொல்லிக்கிட்டு சாப்பிடாம உட்கார்ந்திருக்க”
”நான் ஒண்ணும் அதுக்காக சாப்பிடாம இல்லை”