Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 06 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சிதம்பரத்தில் உள்ள ஒரு பிரபலமான ஓட்டலில் மகளுடன் தங்கியிருந்தார் சிவசங்கரன்.
அங்கு வந்ததும் சாப்பாடு வரவழைத்து மகளுக்கு தர அவளோ கலக்கமாக இருக்கவே அவளுக்கு அவரே ஊட்டியும் விட்டார். தானும் சாப்பிட்டு விட்டு அவளிடம்
”தில்லையையே நினைச்சிக்கிட்டு இருந்தா, அவர் திரும்பி வந்துடமாட்டார்மா போ போய் ரெஸ்ட் எடும்மா“
”இல்லைப்பா எனக்கு தூக்கம் வரலை”
”இப்படியிருக்காத சம்யுக்தா, உன்னைப் பார்க்கவே கஷ்டமாயிருக்கு, உன் அம்மா ரொம்ப வேதனையில இருக்காம்மா, சொன்னாக் கேளு தில்லை போனா என்ன அவனோட உனக்கு நடந்த கல்யாணத்துக்கு சாட்சி கூட கிடையாது, அவனும் நல்லவன் இல்லை, இந்த ஊரையே ஆட்டிபடைச்ச தாதா, அவனை எல்லாரும் ரௌடின்னு சொல்றாங்க, கெட்டவன்னு சொல்றாங்க, அவனை யாருமே நல்லவனா பார்த்ததில்லைம்மா, அப்படியிருக்கறப்ப அவனுக்காக யாரும் நமக்கு உதவ மாட்டாங்க, அவனை விட்டுடு அவன் செத்தானோ உயிரோட இருக்கானோ ஆனா, உனக்கு அவன் வேணாம்மா, உனக்கு நான் வேற வாழ்க்கையை அமைச்சித் தரேன், நீ சந்தோஷமா இருக்கனும் அதான் எனக்கு வேணும்”
“என்னப்பா சொல்றீங்க, தில்லை என்னோட புருஷன்பா, இங்க பாருங்க அவர் என் கழுத்தில கட்டின தாலி, நான் இன்னும் சுமங்கலிதான் என் புருஷன் ஒண்ணும் சாகலை”
”ஆனா அவனை உனக்குப் பிடிக்காதேம்மா”
”ஆமாம்பா அவரை எனக்குப் பிடிக்காததுதான், அவர் காணாம போனதுக்கு முன்னாடி வரைக்கும் அவரை நான் வெறுத்தேன், அப்புறம் அவர் என் புருஷன்ங்கற நினைப்பு மனசுல ஊறிப்போச்சி, வெறுப்பை காட்டினாலும் அவர்தானே என் புருஷன் என்னால அவரை விட்டுட முடியாதுப்பா நீங்கதானே சொன்னீங்க புருஷன்கூடவே இருக்கனும்னு மறந்துட்டீங்களா”
”மறக்கலை சம்யுக்தா ஆனா உலகமே இறந்துப் போனதா சொன்ன ஒருத்தனை தேடறதுங்கறது