(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

இப்போதைக்கு உங்க கேஸ்தான் இருக்கு அதனால உங்களை வரச் சொன்னாரு சரி சரி வாங்க உள்ள” என இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் கான்ஸ்டபிள்

   

மகிழ்ச்சியுடன் சம்யுக்தாவும் சென்றாள். உள்ளிருந்த அதிகாரிகள் அவளைக் கண்டு இளப்பமாக சிரித்தனர். அதைப் பொருட்படுத்தவில்லை அவள், ஆனால் அவளின் தந்தை மட்டும் கவலையடைந்தார்.

   

நேராக ஸ்பெஷல் ஆபிசரிடமே அழைத்துச் சென்றுவிட்டவர் 

   

”சார் இவங்கதான் அந்த தில்லைகேஸ் விசயமா 4 நாளா இங்க வந்து போறாங்க சார்” என சொல்ல சிதம்பரமோ அலமாரியில் இருந்த பைலை புரட்டிக் கொண்டிருந்தவன் கான்ஸ்டபிள் சொன்னதைக் கேட்டு திரும்பி சம்யுக்தாவையும் சிவசங்கரனையும் பார்த்தான். பேசவில்லை ஆனாலும் ஆழமாக இருவரையும் பார்த்தபடியே கான்ஸ்டபிளைப் பார்த்து போகுமாறு தலையசைத்து சைகை செய்ய அவனும் பவ்யமாக தலையாட்டிவிட்டு சென்றுவிட்டார். சிதம்பரமோ அமைதியாக தனது இருக்கையில் வந்து அமர்ந்து கையில் இருந்த பைலை பார்த்தபடியே எதிரில் நின்றிருந்தவர்களிடம்

   

”என்ன விசயம் சொல்லுங்க” என்றான் கெத்தாக, அதற்கு சம்யுக்தா உடனே பேச ஆரம்பித்தாள்

   

”தில்லையை பற்றி தெரிஞ்சிக்கனும், அவர் இறக்கலை காணாம போயிட்டாரு அவரை தேடிப்பிடிக்கனும் ஆபிசர்” என்றாள் அமைதியாக, அதைக் கேட்ட சிதம்பரமோ தலைதூக்கி அவளை ஏற இறங்கப் பார்த்தான். 

   

”யார் நீங்க உங்களுக்கும் தில்லைக்கும் என்ன சம்பந்தம்”

   

“என் பேரு சம்யுக்தா, நான் தில்லையோட மனைவி” என்றாள் அதைக் கேட்டு சிதம்பரம் சிரித்தான்

   

”பார்க்க படிச்சவங்களா இருக்கீங்க, பொய் சொல்றதுக்கு அளவில்லையா உங்களுக்கு”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.