முட்டாள்தனம்”
”அப்பா அவர் சாகலைப்பா, அவரை யாராலயும் கொல்ல முடியாதுப்பா, இவங்க எல்லாரும் பொய் சொல்றாங்கப்பா, தில்லை உயிரோடதான் இருக்காரு எனக்குத் தெரியும்பா நான் அதை நம்பறேன், உங்களுக்கு நம்பிக்கையில்லைன்னா நீங்க போங்க, நான் இங்கிருந்து வரமாட்டேன் என் புருஷனோடதான் வருவேன்”
என பிடிவாதமாக சொல்ல அதற்கு மேல் அவளிடம் பேச முடியாமல் தோற்றுப் போனார் சிவசங்கரன்.
மகளை அப்படியே விட்டுவிட முடியாமல் அவளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டதே என்ற கவலையில் மனம் வாடினார்.
2 நாள் தொடர்ந்து அதே ஓட்டல் அறையில் இருந்தார்கள். 3வது நாள் காலையில் சிவசங்கரனுக்கு போன் வந்தது. அதை பேசியவர் மகிழ்ந்தபடியே சம்யுக்தாவிடம் வந்தார்
”அம்மாடி சம்யுக்தா, இப்பதான் கான்ஸ்டபிள் போன் பண்ணாரும்மா, அந்த ஸ்பெஷல் ஆபிசர் சிதம்பரம் வந்திருக்காராம், நம்மளை பத்தி சொன்னதால நம்மளை பார்க்கனும்னு அவரே சொன்னாராம், வாம்மா போய் பார்த்துட்டு வரலாம்” என அழைக்க அவளும் உடனே உற்சாகமாக ரெடியாகி கிளம்பினாள்.
நேராக இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு நம்பிக்கையுடன் சென்றனர்.
அங்கு கான்ஸ்டபிளும் காத்திருந்தார். சிவசங்கரனை கண்டதும் முகத்தில் சிரிப்புடன் வரவேற்றார்
”வாங்க வாங்க ஏன் லேட்டு”
”மன்னிச்சிக்குங்க சிதம்பரம் சார் இருக்காருங்களா”
”இருக்காரு நான் அவர்கிட்ட உங்களைப் பத்தி சொன்னேன், இன்னிக்கு காலையிலதான் வந்தாரு,