(Reading time: 7 - 13 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”ஏன் அப்படி சொல்றீங்க“

   

”பின்ன தில்லையோட மனைவி நீங்கன்னு சொன்னா நம்பறதுக்கு நான் என்ன முட்டாளா” என சொல்ல அவளோ

   

”உண்மையிலயே நான்தான் அவர் மனைவி, அவர் இறக்கலை, காணாம போயிட்டாரு”

   

”காணாம போயிட்டாருன்னு எப்படி அவ்ளோ உறுதியா சொல்றீங்க, அவர் இறந்துட்டார்ங்கறதுக்கான ஆதாரம் இருக்கே, அதோட டெட்பாடியும் மார்ச்சுவரியில இருக்கு”

   

“நான் அந்த டெட்பாடியை பார்க்கலை, பார்க்கனும்னு அனுமதி கேட்டப்ப போலீஸ் கேஸ் இது, போலீஸ் அனுமதியோட வாங்க காட்டறேன்னு அங்க இருக்கறவங்க சொன்னாங்க”

   

”ஓ அதனால டெட்பாடியை பார்க்கறதுக்கு அனுமதி கேட்டு வந்திருக்கீங்களா”

   

“அந்த டெட்பாடி தில்லையோடது இல்லைங்க ஆனா, அதை யாரும் நம்பலை, அதை நிரூபிக்கத்தான் பார்க்கனும்னு நினைக்கிறேன், நீங்க அனுமதி கொடுத்தா நான் போய் பார்ப்பேன் அது மட்டும் தில்லையோடது இல்லைன்னா என் புருஷன் உயிரோடதான் இருக்காரு, காணாம போயிட்டாரு”

   

“காணாம போறதுக்கு தில்லை என்ன பச்சைக்குழந்தையா, இந்த ஊரையே உலுக்கி எடுத்த ஒரு தாதா, ரௌடி, பொறுக்கி புரியுதா” என சொல்ல அவளோ

   

”ஆமாம்ங்க அவர் தாதாதான் ஒத்துக்கறேன், அவரும் மனுஷன்தானே அவரால நல்லவங்களுக்கு ஆபத்து வரலையே அப்புறம் ஏன் அவரை வெறுக்கறீங்க”

   

”இதப்பாருங்க எங்களுக்கு வந்த தகவல்படி தாதா தில்லை இறந்துட்டான், எதிரியால சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு அயோக்கியன், அதோட அவனோட ஃபைலையும் க்ளோஸ் பண்ணிட்டாங்க போதுமா” என சொல்லியபடியே அவள் முன் தன் கையில் வைத்திருந்த ஃபைலை வைத்தான். அதன் மேல் அட்டையில் க்ளோஸ்டு என ஆங்கிலத்தில் இருக்கவே அவளோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.