“சுவாதி கல்யாணம் எப்படி நடந்துச்சு ஜெனி? எல்லாம அமர்க்களமா இருந்திருக்கனுமே?” அம்பிகா விடியோ வழியாக ஜெனிபரிடம் கேட்டாள்.
“பயங்கர கிராண்டா நடந்துச்சு ஆன்ட்டி. எல்லாமே ப்ளான் செய்த மாதிரி போச்சு. சின்னதா கூட ஹிக்கப் இல்லை. சுவாதி அழகா இருந்தா. அவ முகத்துல எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?”
“கல்யாணம்னா சும்மாவா! நீயும் நல்லா என்ஜாய் செய்தியா?”
“ரொம்ப ஜாலியா போச்சு ஆன்ட்டி. டான்ஸ் எல்லாம் ஆடினோம். உங்களுக்கு போட்டோஸ் அப்புறம் அனுப்புறேன்.”
“அனுப்பு டா. மார்ட்டின் கூட கல்யாணம் பத்தி என் கிட்ட விசாரிச்சான்.”
“நீங்க அவன் கிட்ட பேசினீங்களா?”
“அவனும் இதே கேள்வியை உன்னைப் பத்திக் கேட்டான். நீ அவனோட பேசவே இல்லையாமே?”
“பேசனும் ஆன்ட்டி, டைம் கிடைக்கலை.”
“மார்ட்டின் மேல உனக்கு ஏதாவது கோபமா என்ன? அவனை பார்த்தா நல்லப் பையனா தான் தெரியுறான். தப்பா ஏதாவது பேசிட்டானா என்ன?”
“பார்க்குறதை வச்செல்லாம் யாரையும் எடைப் போட முடியாது ஆன்ட்டி. மனுஷங்க மனசுல என்ன இருக்குன்னு யாராலேயும் கண்டுப்பிடிக்க முடியாது.”
“அது என்னவோ உண்மை தான் டா. இருந்தாலும் எனக்கு மார்ட்டின் மேல நல்ல அபிப்ராயம் இருக்கு. அவனாவே எவ்வளவு பேருக்கு உதவினான். வேற யாருக்கு அந்த மனசு வரும்?”