(Reading time: 7 - 13 minutes)
Inspector Then
Inspector Then

  

பேசியபடி அவளுக்கு கை அசைத்து விட்டு ஜீப்பில் ஏறி பறந்தான் தேன்.

  

கணவன் சென்ற திசையை பார்த்து விட்டு வீட்டினுள் திரும்பிய சத்யாவிற்கு மீண்டும் முன் தினம் வந்த எஸ்.எம்.எஸ் நினைவு வந்தது. அவளுடைய அண்ணன் சங்கர் அனுப்பி இருந்தான்.

  

"அப்பாவிற்கு உடம்பு சரி இல்லை. உடனே கிளம்பி வா!"

  

அந்த மெசேஜை படித்ததில் இருந்து அவளுள் சிறு வயது நினைவுகளும், பின் நடந்த நிகழ்வுகளும் அணிவகுத்துக் கொண்டிருந்தன.

  

"இனிமேல் நான் அந்த வீட்டுக்கு போக மாட்டேன்...!"

  

சங்கரும் அவளுடைய அம்மா குமுதவள்ளியும் தென்றல்வாணனிடம் நடந்துக் கொண்ட விதத்தை பார்த்து அவள் எடுத்த முடிவு அது. ஆனாலும் தான் ஆடா விட்டாலும் சதை ஆடுமே! அப்பாவிற்கு உடல் நலம் சரியில்லை என தெரிந்ததில் இருந்து அவள் மனமும் பாசத்தினால் ஊசலாடிக் கொண்டிருந்தது. இருந்தாலும் கணவனிடம் அதை சொல்ல அவளுக்கு தயக்காமாகவும் இருந்தது.

  

********************

  

டி.எஸ்.பி முன் நின்று சல்யூட் அடித்தான் தென்றல்வாணன்!!

 

"தேன், உங்க ரெக்வெஸ்ட் பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன். ஆர் யூ ஷுயர்? நீங்க தான் எங்க பெஸ்ட் ஆபிசர்! இது மதியூர் கேஸ், கூடவே ரொம்ப ஹை ப்ரோபைல் கேஸ் வேற?" எனக் கேட்டார் டி.எஸ்.பி சந்தேகத்துடன்.

  

"சார், நான் மட்டுமில்லை, வினோதனும் கூட ஒரு சின்சியர் அண்ட் கேப்பபில் ஆபிசர். நீங்க தாராளமா இந்த கேசை அவர் கிட்ட கொடுக்கலாம்!" என்றான் தென்றல்வாணன்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.