நித்தேஷின் முகத்தைப் பார்த்து கயல்விழிக்கு அந்த இடத்திலும் சிரிப்பு வந்தது.
“என்ன நித்தேஷ் இப்படி முழிக்குறீங்க?” என அந்த சிரிப்புடன் கலந்து அவனிடமே கேட்டாள்.
“நான் உன்னை எதிர்பார்க்கவே இல்லை கயல்! நீ டெக்ஸ்ட் அனுப்பிக் கூட எனக்கு என்னன்னு கேட்கவே இல்லை! திடீர்னு நேருல வந்திருக்க?”
“உங்க மேல கோபத்துல இருந்தேன், அதான் டெக்ஸ்ட் செஞ்சு என்ன ஆச்சுன்னு கேட்கலை.”
“கோபமா? முதல்ல உள்ளே வா, உட்கார்ந்து பேசலாம்!”
நித்தேஷ் கதவை முழுவதுமாக திறக்கவும் கயல்விழி தயக்கமில்லாது உள்ளே சென்றாள்.
அவளின் பார்வை வீட்டை சுற்றி செல்வதை கவனித்து, “இப்போ ஓரளவுக்கு டிசன்ட்டா தான் இருக்கும். இன்னைக்கு தான் எல்லாம் எடுத்து அரேன்ஜ் செய்து வச்சேன்,” என்றான் நித்தேஷ்.
மேஜை மீதிருந்த காய்ந்துப் போன தட்டு, தரையில் கிடந்த செய்தி தாள்கள், டிவிக்கு நேரே இருந்த கார்ப்பெட் தரையில் இருந்த ரிமோட் மற்றும் டம்பளர்கள் என அனைத்தையும் கவனித்த கயல்விழிக்கு நித்தேஷ் சொன்ன பதில் புன்னகையை வரவழைத்தது.
இது தான் அவனுக்கு அரேன்ஜ் செய்த வீடு என்றால், அவனுடைய அரேன்ஜ் செய்யாத வீடு எப்படி இருக்கும் என்றுக் கூட தெரிந்துக் கொள்ள அவளுக்கு ஆசை இருக்கவில்லை.
கௌச் மேலே இருந்த புத்தகங்களை கைகளில் அள்ளிக் கொண்ட நித்தேஷ், “உட்கார் கயல்,” என்றான்.
“அதை எதுக்கு சுமக்குறீங்க? உடம்பு வேற சரி இல்லை. இப்படியே வைங்க. எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை,” என்றாள் கயல்.
கொஞ்சமாக அசடு வழிந்து, “என் வீட்டுக்கு அவ்வளவா யாரும் விசிட்டர்ஸ் வர மாட்டாங்க,
waiting 4 next epi