கயல் கேலி இப்போதும் செய்வது புரிந்து, “டீஸ் செய்யாதே கயல்,” என சொல்லி சிரித்தான் நித்தேஷ்.
“அதெப்படி செய்யாம இருக்குறது? நீங்க வரவும் இல்லை. இரண்டு மணி நேரம் உங்க கதை எல்லாம் கேட்டு இருக்கேன், சும்மா விட முடியுமா?”
ரவிராய் மனைவியிடம் என்ன சொல்லி வைத்திருக்கிறாரோ என்ற யோசனை மனதுள் தோன்ற கை எடுத்து கும்பிட்டான் நித்தேஷ்.
“ப்ளீஸ், கயல்! நீ டீஸ் செய்தா நான் ரொம்ப பிளஷ் செய்வேன், கேவலமா இருக்கும்!!!”
கயல் அவளையும் அறியாது சத்தமாக சிரித்தாள்!
அவளின் சிரிப்பில் நித்தேஷ் மொத்தமாக மயங்கிப் போனான். மல்லிகை மொட்டுகளாக தெரிந்த பற்களும், தேன் குழைத்த சுளைகளாக மின்னிய உதடுகளும், அவளின் சிரிப்பினால் விரிந்த கன்னங்களும் அவனை என்ன எல்லாமோ செய்தது.
அவனின் பார்வையை கவனித்த கயல்விழியின் சிரிப்பு தானாக நின்றது. கன்னங்கள் மெல்ல நிறம் மாறின.
“நான் கிளம்புறேன் நித்தேஷ். ப்ளான் செய்யாம திடீர்னு கிளம்பி வந்தேன். ரித்விக் வேற வெயிட் செய்துட்டு இருப்பான். உடம்பை பார்த்துக்கோங்க.”
“நான் இப்போ நல்லா தான் இருக்கேன், கயல். அதும் உன்னைப் பார்த்ததும் ரொம்பவே நல்லா இருக்கேன். உனக்காகவே நாளைக்கு ஆபீஸ் வந்திருவேன்.”
கயல்விழி அவனை கேள்வி நிறைந்த விழிகளுடன் ஏறிட்டாள்!
அந்த விழிகளின் கேள்வியுடன், அதன் அழகையும் ரசித்து, புன்னகைத்தவன், “உன்னை பாவனி
waiting 4 next epi