“ஓகே, தென் ஃப்ரைடே மீட் செய்வோம் மனோஜ். அப்போ இன்னும் நிறைய பேசலாம்.” என்றான்.
“ஓகே ஷயர், சரவணன். டைம் கிடைச்சா வீட்டுக்கு வாங்க. மஞ்சு உங்களை பார்த்தா சந்தோஷப் படுவா!” என்று மனோஜ் முழுவதுமாக சொல்லி முடிக்கும் முன்பே,
“இல்லை மனோஜ்... இன்னொரு டைம் பார்க்கலாம்...” என்றாள் அமுதா.
மனோஜ் சட்டென்று வந்த பதிலை எப்படி எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யும் முன்பு, சரவணன்,
“பயங்கர டைட் ஸ்கெட்யூல் மனோஜ் அதனால தான் அமுதா அப்படி சொல்றா... நீங்க மஞ்சு கிட்ட நெக்ஸ்ட் டைம் நாங்க கட்டாயம் வரோம்னு சொல்லுங்க...” என்றான் தணிவாக.
மனோஜ் தலையை மட்டும் அசைத்தான்.
அமுதா என்ன நினைத்தாளோ,
“நீங்க இந்த வேலையில ஜாயின் செய்தது உங்க மனைவிக்கு தெரியுமா, மனோஜ்? அவங்களுக்கு பிடிக்காத வேலையில நீங்க ஜாயின் செய்திருக்க போறீங்க?” என்றாள்.
மனோஜிற்கு அமுதாவின் பேச்சின் முழு பின்புலம் புரியவில்லை. ஆனால் அமுதா மஞ்சுவை குறித்து தவறாக நினைத்துக் கொண்டிருப்பது தெளிவாகப் புரிந்தது.
அமுதாவிடம் அதை குறித்து பேசி தெளிவுப் படுத்தலாம் என்று யோசித்தான்...
ஆனால், ஒரு விஷயம் அவனை தடுத்தது!!!
இந்த கிங் சாப்ட் நிறுவனத்தில் அவனை சிகப்பு கம்பளம் விரிக்காத குறையாக வரவேற்று