(Reading time: 16 - 31 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

"ஆனால் நீ அன்னைக்கு ஏதோ விட்டுக் கொடுக்குறது பத்தி எல்லாம் சொன்னீயே????" என வினவினான்.

  

"ம்ம்ம்ம்... அதில தான் அப்பா வரார்... எங்க அப்பாவும் பாரதியோட அப்பாவும் பால்ய நண்பர்கள்... அப்பா கம்பெனி ஆரம்பிக்க தன்னுடைய நிலத்தை வித்து அந்த காலத்திலேயே ஒரு லட்சம் கொடுத்திருக்கார் பாரதியோட அப்பா... அப்பா நல்ல நிலைமைக்கு வந்த பின்னும் கூட அந்த பணத்தை திருப்பி வாங்க பாரதியோட அப்பா மறுத்துட்டார்... மகள் கல்யாணத்தில் பிரச்சனைன்னு வந்தப் போது, பாரதியோட அப்பா உதவி கேட்டு எங்க வீட்டுக்கு வந்திருக்கார். அப்போ அப்பா அவர் தன்னுடைய தொழிலில், அவரையும் ஒரு ஸ்லீப்பிங் பார்ட்னரா இவ்வளவு நாளும் பாவிச்சு அவர் பேர்ல போட்டு வச்சிருக்கிற கிட்டத்தட்ட பத்து கோடி பத்தி சொன்னார்... அப்புறம் என்ன? விஷயம் தெரிஞ்ச உடனே நம்ம பாலாக்கு மனசு மாறிடுச்சு.. அங்கே நூறு கோடி இருந்தாலும் மாமனாருக்கு ஜிங் ஜாங் போடனும்... இங்கே கல்யாணத்தின் போதே பத்து கோடி கையில் வந்திடும்... கூடுதலா விரும்பின பொண்ணு வேற.. அப்புறம் என்ன ஐயா பாடு ஜாலி தானே??? சரியான கேனையன்...."

  

"அப்புறம் ஏன் அந்த கல்யாணம் நடக்கலை???"

  

"பாரதியை என்னன்னு நினைச்ச நீ? பாலா சரின்னு சொன்ன பிறகும் பாரதி ஒரேடியா நோன்னு சொல்லிட்டா... இந்த மாதிரி மனசு மாறுற பச்சோந்தி எல்லாம எனக்கு வேண்டாம்னு சொல்லிட்டா... பாலாக்கு அதெல்லாம் உறைக்குமா என்ன? இங்கே இவங்க நோன்னு சொன்ன உடனே, அவன் அந்த பக்கம் அங்கே போய் சவுந்தர்யாவை கல்யாணம் பண்ணி இப்போ ரெண்டு குழந்தையும் இருக்கு..."

  

"உனக்கு எப்படிடா இதெல்லாம் தெரியும்??"

  

"சொன்னேன்ல பாரதியோட பணம் பத்தி... அந்த பணத்தை இன்னமும் பாரதி வேண்டாமுன்னு தான் சொல்லிட்டு இருக்கா... நான் கம்பெனி நிர்வாகத்தை ஏத்துக்கிட்ட போது அப்பா என்னையும் என் மனைவியையும் உட்கார வச்சு இதைப் பத்தி கொஞ்சமா சொல்லி எப்படியும் அந்த பணம் பாரதிக்கு போய் சேரனும்னு சொன்னார்... அப்புறம் அம்மா கொஞ்சம் விலாவாரியா சொன்னாங்க... நான் தான் லூசு மாதிரி அங்கே வாயை விட்டுட்டேன்... சரி

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.