(Reading time: 16 - 31 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

பார்த்திபன் பேசி முடித்த உடனே பதில் சொல்லாது சில வினாடிகள் அமைதியாக இருந்த பாரதி, பின்,

  

"சாரி சார்... மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நான் எதுவும் தப்பு செய்யலை... அன்று நான் கடைசியா பேசினது தப்பு என்றால் மிஸ்டர் விவேக் என்னிடம் மரியாதை குறைவா பேசியதும் தப்பு தான்... அவர் அதை தவறு என்று ஒத்துக் கொண்டால் நானும் நான் பேசியது தவறு என்று ஏற்றுக் கொள்கிறேன்..."

  

"பாரதி... இப்படி பிடிவாதமா பேசுறதாலே எதுவும் நடக்க போறதில்லை..." என்றான் பார்த்திபன்.

  

"இதுல பிடிவாதம் எங்கே இருந்து வந்தது சார்?"

  

"இதே தான்... இதே திமிர் தான்... இப்படி நீங்க உங்க விருப்பப்பட்ட வாழ்க்கையை தொலைச்சிட்டு இங்கே இப்படி இருக்க காரணம்... இன்னைக்கு கல்யாணம் ஆகி பிள்ளைக் குட்டியோடு இருக்கிற பழையக் காதலனையே நினைச்சுட்டு நீங்க இப்படி இருக்கிறதுக்கு, கொஞ்சம் விட்டுக் கொடுக்க கத்துக்கிட்டு இருந்தா பரவாயில்லை.... முன்னாடியே முயற்சி செய்திருந்தால், உங்க லவ்வும் சக்சஸ் ஆகி இருந்திருக்கும்...." சற்றே ஏளன தோரணையுடன் பார்த்திபன் பேசி முடித்தப் போது அங்கே இருந்தவர்கள் அனைவரும் திகைத்து தான் போனார்கள்.

  

பாரதியின் முகம் முதல் முறையாக கன்றி சிவந்தது. தன்னுடைய சொந்த வாழ்க்கை பிரச்சனை குறித்து இங்கே, இத்தனை பேர் முன்பு பேச வேண்டிய அவசியம் என்னவென்று அவளுக்கு புரியவில்லை. பற்களால் உதட்டை கடித்தப் படி இருந்தாள்... ஆனாலும் விரைவாகவே தன்னை நிதான படுத்திக் கொண்டவளாய்,

  

"உங்க அட்வைசுக்கு ரொம்ப நன்றி சார்... வேண்டுமென்றால் இங்கே படிக்கிற பசங்களுக்கு ஒரு கேஸ் ஸ்டடியா இதைக் கொடுக்கலாம்...அவங்களுக்கு futureல யூஸ் ஆகும்..." என்றாள்.

  

அதற்குள் சற்று தெளிவடைந்திருந்த விஸ்வநாதன்,

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.