(Reading time: 16 - 31 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

நானே பார்த்துக்கிறேன்...எனக்கு அப்படி என்ன கேட்க போறாங்கன்னு தெரிஞ்சுக்க தான் ஆவலா இருக்கு... நீ கவலைப் படாதே...."

  

பாரதி ஈசியாக சொன்னாலும் பவித்ராவிற்கு டென்ஷனாக தான் இருந்தது!

   

***************

  

விவேக்கும் உமாவும் கல்லூரி வளாகத்தை அடைந்தப் போது, பார்த்திபனும் அவனின் தந்தை விஸ்வநாதனும் ஏற்கனவே அங்கே வந்திருந்தார்கள். குளிர் சாதன வசதி படைத்த ஒரு அறையில் சென்று அமர்ந்த பின், உமாவை அவர்களுக்கு அறிமுக படுத்தினான் விவேக். பின் தன் நண்பன் பார்த்திபனுடன் சென்று பேச தொடங்கினான்.

   

விவேக் விஷயம் சொல்லி அழைத்த உடனேயே, உமா அவனுடன் வர சம்மதித்து விட்டாள். பாரதியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவளுள்ளும் பல நாளாக இருந்து வந்தது. தன் குழந்தையை ஒரு மணி நேரம் கவனித்துக் கொள்ள சொல்லி வேலை ஆளிடம் சொல்லி விட்டு, மதுவையும் ஒரு கண் வைத்திருக்குமாறு பணித்து விட்டு, விவேக்குடன் கிளம்பி வந்திருந்தாள் உமா.

  

மெமோவில் குறிப்பிட்டு இருந்ததுப் போல நான்கு மணிக்கு பாரதியும், சிதம்பரமும், துணை முதல்வர் பாபுவும், பாரதியின் துறையின் தலைவர் பத்மாவதியும், மீராவும் வந்து விட, திட்டமிட்டது போலவே மீட்டிங் தொடங்கியது.

   

பாரதியையே கவனித்துக் கொண்டிருந்த உமாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. அங்கே விவேக் இருப்பதை பார்த்து பாரதியின் முகத்தில் ஆச்சர்ய ரேகைகள் தோன்றி மறைந்தது. மற்றபடி அவளிடம் தயக்கமோ, பயமோ தென்படவில்லை. சிதம்பரமே பேசத் தொடங்கினார்.

  

"பாரதி, இந்த மீட்டிங் எதைப் பத்தின்னு உங்களுக்கே புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்...பேரெண்ட்ஸ் நம்ம எல்லோரையும் நம்பி தான் பசங்களை காலேஜுக்கு அனுப்புறாங்க... அப்பப்போ அவங்களுக்கு ஏதாவது சந்தேகமோ கவலையோ இருந்தால் காலேஜுக்கு வந்து டீச்சர்ஸ் பார்த்து பேசுறது சாதாரணமான விஷயம் தான்... அப்போ அவங்க கிட்ட எப்படி நடந்துக்குறதுன்னும் ஒரு சில விதி முறைகள் இருக்கு.... மிஸ்டர் விவேக் நீங்க

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.