(Reading time: 16 - 31 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

அவர் கிட்ட மரியாதை குறைவா பேசியதா கம்ப்ளைன்ட் செய்திருக்கிறார்... உங்க கிட்ட இதை பத்தி நான் ஒரு முறை பேசி கண்டிச்சது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்... வேற ஏதாவது நீங்க சொல்ல பிரிய படுறீங்களா?"

  

ஏதோ குற்றவாளி போல் தன்னை நிறுத்தி வைத்து சிதபரம் பேசியது பாரதிக்கு உண்மையில் மன வருத்தத்தை தந்திருக்க வேண்டும். ஆனால், அவளுக்கு ஏனோ இது எல்லாம் வருத்தம் அளிப்பதாக இல்லை...

  

"சார்... நான் அன்னைக்கே இதைப் பத்தி என்னுடைய பக்கம் இருக்கும் விளக்கத்தை சொன்னேன்... நான் மதுமதியை திட்டவும் இல்லை கடுமையாக எதுவும் சொல்லவும் இல்லை... ஒரு கேள்வி கேட்டேன்... பதில் தெரியலை... அடுத்த கிளாஸ்சுக்கு படிச்சுட்டு வர சொன்னேன்... இதுல எதுவும் தப்பு இருப்பதா எனக்கு தோணலை... மிஸ்டர் விவேக் என்னிடம் வந்து மதுமதி மனசு வேதனை படாமல் கிளாஸ் நடத்த சொன்னால் நான் என்ன சொல்றது??"

  

"இதோ பாருங்க பாரதி, நீங்க சிதம்பரம் சார் சொன்னதுக்கு பதில் சொல்லாமல் வேற விஷயம் பேசுறீங்க..." என்றான் பார்த்திபன் மிக கடுமையான குரலில்.

  

அவன் குரலின் தோரணை, அங்கிருந்தவர்களில் விவேக்கை தவிர மற்ற அனைவரையும் புருவம் உயர்த்த செய்தது. இருந்தும் தணிவாகவே பதில் சொன்னாள் பாரதி.

  

"இல்லை சார்... என்னுடைய தரப்பு விஷயத்தை சொன்னேன்..."

  

"இங்கே என்ன கோர்ட்டா நடக்குது? நீங்க உங்க சைடு விஷயம் பேசவும் நாங்க அதை எல்லாம் கேட்கவும்? நீங்க ஒரு நல்ல டீச்சர் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை... ஆனால் வெறும் படிப்பு மட்டும் பசங்களுக்கு போதாது... இங்குள்ள லெக்சரர்ஸை பார்த்து தான் ஸ்டுடன்ட்ஸ் எல்லோரும் டிசிப்ளின் கத்துக்குறாங்க... நீங்க அவங்களுக்கு ஒரு தப்பான முன்னுதாரணமாக இருக்க கூடாது..."

  

"சாரி சார்... நான் அப்படி எதுவும் செய்யலையே..."

  

"என்ன செய்யலையே? அவரோட தங்கச்சிக்காக விவேக் பேச வந்தார்.... நீங்க அவர் கிட்ட

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.