(Reading time: 17 - 34 minutes)
Manasa Theevu
Manasa Theevu

  

ஹெல்ப் செய்வோம் மான்சி, நீ கரைய வேண்டாம் கேட்டியோ?."

  

அவள் அழுதுக்கொண்டே தலை ஆட்டினாள்." நீ கரைஞ்சா, என் மனசு வேதனையா இருக்கு. ஞான் இருக்கேன், உன் அச்சன நல்ல ஆஸ்பிடல்ல சேர்த்து ஞான் சரி செய்யும், உன் அச்சனுக்கு ஒன்னும் ஆகாது,  நீ கரைய கூடாது கேட்டா?"

  

"சரி" என்று அவள் கூறியவுடன், அங்கிருந்து  கிளம்பினார்கள் இருவரும்.

  

ஹாஸ்பிடல் போகும் வழியிலேயே நாயர் தன்னுடைய டாக்டர், ஐசாக் இடம் பேசிவிட்டான். அங்கு இருந்து நேரே தங்கள் ஆஸ்பிட்டலுக்கு மான்சாவின் அப்பாவை கூட்டிக் கொண்டு போக எல்லா ஏற்பாடும் செய்து விட்டான்.

  

ஹாஸ்பிடல் சென்றவுடன் எப்படியோ அவர்கள் அப்பாவின்  ரூமை அடைந்தார்கள். அங்கு அவள் அம்மா சோகமே உருவாக உட்கார்ந்து இருந்தார். மானசாவை கண்டவுடன், "மானசா  உன் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்." என்று அழுதுகொண்டே கூறினார்.

  

"தெரியும் அம்மா அதுக்குதான் தான் வந்து இருக்கேன் நான்."

  

"உனக்கு யாராக்கும் சொன்னா?"

  

"நம்ம சாரதே மாமி தான் சொன்னார்."

  

"அவளை நீ எங்காக்கும் பார்த்தே?"

  

"அம்மா அதப் பத்தி அப்புறம் பேசலாம், இப்ப அப்பாக்கு எப்படி இருக்கு சொல்லு?"

  

"எனக்கு ஒன்னும் புரியலை அவா என்ன என்னவோ சொல்றா, எனக்கு புரியல."

  

"சரி அவர் வேறு ஒரு நல்ல ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக ஏற்பாடு செய்திருக்கிறார். அவர்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.