(Reading time: 17 - 33 minutes)

வள் தாய்க்கு ஏதோ சரி இல்லை என்று மட்டும் தோன்றியது. என்றும் இல்லாமல் இன்று ஏன் தன் மகள் அண்ணன் இருந்திருக்கலாம் என்று சொல்ல வேண்டும் என்று குழப்பமாக இருந்தது. சரி இப்போது இதை நினைத்து குழம்ப வேண்டாம் என்று எண்ணி கீழே சென்றார்.

அங்கு இளவரசனுக்கோ உறக்கமே பிடிக்கவில்லை. எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன். இனி அவள் என்னிடம் பேசுவாளா என்று கூட சந்தேகமாகி பொய் விட்டதே என்று எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருந்தான்.

அவளுக்கு “ஐ யம் சாரி” என்று திரும்ப திரும்ப மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தான். இனியாவோ அதை பார்த்தால் தானே. அவள் கலைப்பினாலோ அல்லது மருந்தாலோ நன்றாக உறங்கி விட்டிருந்தாள்.

அடுத்த நாள் காலையும் இனியாவிற்கு காய்ச்சல் குறையவே இல்லை. அவள் தந்தை வந்து பார்த்து டாக்டரை வீட்டிற்கே வர வைத்தார். டாக்டரும் அவளுக்கு இன்ஜெக்சன் போட்டு விட்டு சில மருந்துகளையும் கொடுத்து விட்டு சென்றார். இனியா இப்படியே அன்று முழுவதும் உறக்கத்திலேயே கழித்தாள்.

இனியாவின் தாய் ஜோதிக்கு போன் செய்து இனியாவிற்கு உடம்பு சரி இல்லாததையும், அவள் நேற்று அண்ணனை பற்றி பேசியதையும் சொல்லவே ஜோதியும், பாலுவும் அபி சகிதமாக வீட்டிற்கு வந்திருந்தனர்.

அங்கு இளவரசனின் நிலையோ மிகவும் மோசமாக இருந்தது. அவன் இரவு முழுவதும் உறங்கவே இல்லை. இனியா எப்படியாவது கொஞ்சமாவது கோபம் குறைந்து ஒரு மெசேஜ் ஆவது செய்வாள் என்று எண்ணினான். மொபைலையே பார்த்துக் கொண்டு அவன் இரவு முழுவதும் உறங்கவே இல்லை. இனியா என்னை மன்னித்து விடு, என்று வித விதமான வார்த்தைகளால் அவளுக்கு மெசேஜ் செய்துக் கொண்டே இருந்தான்.

அடுத்த நாள் காலை அந்த பாரினில் இருந்து வந்தவர்களை வெளியில் அழைத்து செல்வதாக கூறியதை அவன் அசிஸ்டன்ட் கூறிய வுடன் தான் அது அவனுக்கு நினைவிற்கு வந்தது. நேற்று இனியா வேறு தான் வேலைகளை எப்படியும் முடிக்க வேண்டும் என்று பேசியதை எல்லாம் எண்ணி தானே அவர்களை மகாபலிபுரம் அழைத்து செல்வதாக முடிவு செய்தான்.

ஆனால் அங்கு சென்றவுடனும் அவனால் அங்கு நார்மலாக இருக்க இயலவில்லை. அவர்களுக்கு அங்கு இருந்த சிற்பங்களை எல்லாம் காண்பித்த வுடன் அதை எல்லாம் ரொம்ப ஆர்வத்துடன் கண்டு களித்தார்கள். ஆனால் இளவரசனுக்கு தான் அதை கண்டு சந்தோஷப் பட இயலவில்லை. அவனுக்கு மனம் ஒரு நிலையிலே இல்லை.

சிற்பங்களை எல்லாம் பார்த்து முடித்த பின்பு கடற்கரைக்கு அவர்களை அழைத்து சென்றான். எப்போதும் இளவரசனுக்கு மகாபலிபுரம் பீச்சை பார்த்தால் மிகுந்த உற்சாகம் வரும். மெரினா பீச்சை விட மகாபலிபுரம் பீச் ஏதோ அவனை கவர்வதாக தோன்றும். ஆனால் இன்று எதுவுமே அவன் மனதில் பதிய மறுத்தது.

அங்கு இனியா என்ன செய்கிறாளோ. தினமும் வரும் குட் மார்னிங் மெசேஜ் கூட இன்று வரவில்லை. அது எப்படி வரும். நீ நேற்று செய்த முட்டாள் தனத்திற்கு அவள் உனக்கு மெசேஜ் வேறு செய்வாளா என்று அவன் மனமே அவனை திட்டி தீர்த்தது. அவனுக்கு ஏனோ ஒன்றும் ஓடவில்லை.

சரி இனியாவின் ஹாஸ்பிடல் எண்ணிற்கு அழைக்கலாம் என்று எண்ணி அவள் ஹாஸ்பிடலுக்கு அழைத்தான். ஆனால் அங்கோ இனியா இன்று வரவில்லை என்றார்கள். இளவரசனுக்கு அவனின் குற்ற உணர்ச்சி இன்னும் அதிகமாகியது. திரும்ப இனியாவின் எண்ணிற்கே அழைத்தான். ஆனால் அதில் ஏதும் பதில் இல்லை. அவனுக்கு பைத்தியமே பிடித்து விடும் போல் இருந்தது.

திடிரென்று ஏதோ தோன்றியவனாக தன் தம்பிக்கு போன் செய்தான்.

“சந்துரு. இனியாவிற்கு போன் செய்தேன். அவங்க போன் எடுக்கலை. நீ அவங்களுக்கு போன் செஞ்சி பாரு. எடுத்தா என் நம்பர்க்கு கொஞ்சம் கூப்பிட சொல்றியா” என்றான்.

“சரின்னா. நான் இதோ உடனே செய்றேன்” என்றான்.

ஒரு பெரு மூச்சை விட்டவாறே கடற்கரையில் அமர்ந்தான்.

ஒரு அரை மணி நேரம் கழித்து போன் செய்த சந்துரு “அண்ணா. இனியாவின் எண்ணிற்கு போன் செய்தேன். அவங்க எடுக்கலை. அப்புறம் அவங்க வீட்டு நம்பர்க்கு போன் பண்ணேன். அவங்களுக்கு உடம்பு சரி இல்லையாம் அவங்க அம்மா சொன்னங்க, அதான் அவங்க போன் கூட எடுக்கல போல” என்றான்.

“ஒ அப்படியா சந்துரு. ஓகே. நான் உனக்கு அப்புறம் கூப்பிடறேன்” என்று போனை அணைத்தான்.

இப்போது என்ன செய்வது என்றே அவனுக்கு புரியவில்லை. அவளை நான் எந்த அளவுக்கு காயபடுத்தி இருந்தால் அவளுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போக கூடிய நிலை ஏற்படும் என்று எண்ணி எண்ணி வருந்தினான்.

என்ன செய்வது என்ன செய்வது என்று தலையில் கை வைத்தவரே எண்ணிக் கொண்டிருந்தான். ஏதோ முடிவு செய்தவனாக அவன் அசிஸ்டண்டை அழைத்து தனக்கு முக்கிய வேலை இருப்பதாகவும் அவர்களை அவனையே ஹோட்டலிற்கு அழைத்து செல்லுமாறு பணித்து விட்டு சென்றான்.

நேரே வீட்டிற்கு சென்ற இளவரசன் தான் அன்னையை அழைத்து இனியாவிற்கு உடல்நிலை சரி இல்லாததை சொல்லி “நாம் போய் பார்க்கலாமா அம்மா. அவர்கள் நமக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறார்கள். நாம் சும்மா அவர்கள் வீட்டிற்கு ஒரு முறை போய் பார்த்து விட்டு வந்து விடலாமா” என்றான்.

அவன் தாயிற்கு அவன் போக்கு விசித்திரமாக இருந்தாலும் அதை வெளியில் காட்டாமல் “அதற்கென்ன போய் விட்டு வரலாம். அவர்கள் நமக்கு உதவி செய்தார்கள் என்றெல்லாம் இல்லை. நமக்கு தெரிந்தவர்களுக்கு உடல்நலம் சரி இல்லை என்றால் பொய் பார்ப்பதில் ஒன்றும் தவறில்லை. வா போகலாம்” என்றார்.

இளவரசனுக்கு அவன் தம்பி வீட்டில் இல்லாததும் பெரும் நிம்மதியாக இருக்க விரைவாக கிளம்பினான்.

இளவரசன் இனியாவின் வீட்டிற்கு சென்ற போது இனியாவின் அக்கா ஜோதி தான் அவர்களை வரவேற்றார். இளவரசனுக்கு வேலை வைக்காமல் அவன் தாயே “இனியாவிற்கு உடம்பு சரி இல்லை என்று கேள்வி பட்டோம். அதான் பார்த்து விட்டு போகலாம் என்று வந்தோம்” என்று கூறினார்.

ஜோதியும் அவர்களை வரவேற்று அவள் தாயை அழைத்து அவர்களிடம் பேச விட்டு விட்டு அவர்களுக்கு காபி கொண்டு வந்தாள். அதற்குள் இளவரசனுக்கு அவன் பொறுமை எங்கேயோ சென்று விட்டது. அவள் வீட்டிற்கே வந்தும் அவளை இன்னும் பார்க்க முடியவில்லையே என்று அவனுக்கு எரிச்சலாக வந்தது.

காபியை கூட குடிக்காமல் “இனியா எங்கே” என்றான்.

“அவள் அவளுடைய அறையில் இருக்கிறாள்” என்று ஜோதி பதிலளித்தாள்.

“ஒ. சரி. அவர்களை பார்த்து விட்டு வந்து விடலாமா அம்மா” என்று அவன் அன்னையிடம் வினவினான்.

அவன் அன்னையும் ஜோதியிடம் “இனியாவை பார்க்கலாமா” என்று கேட்டார்.

ஜோதியும் சரி என்று கூறி அவர்களை இனியாவின் அறைக்கு அழைத்து சென்றாள்.

அவர்கள் இனியாவின் அறைக்கு சென்ற போது இனியா உறங்கி கொண்டு தான் இருந்தாள்.

இளவரசனுக்கு அவளை அந்நிலையில் பார்த்தது மனதை ஏதோ செய்தது. நேற்று பார்த்ததற்கு இன்று ஏதோ காய்ந்த சருகை போல் காட்சி அளித்தாள். அவளின் இந்நிலைக்கு தான் தான் காரணம் என்று அவன் மனசாட்சியே அவனை உலுக்கியது.

இளவரசனும் அவன் தாயும் இனியாவை எழுப்ப வேண்டாம் என்று கூறியும் ஜோதி ஒரே ஒரு முறை கூப்பிட்டு பார்க்கிறேன் என்று கூறி “இனியா இனியா” என்றாள்.

அந்த அழைப்பிலேயே இனியா விழித்தாள்.

கண்ணை திறந்த இனியா எதிரே சிவந்த விழிகளுடன் நின்றிருந்த இளவரசனை தான் கண்டாள். 

தொடரும்

En Iniyavale - 08

En Iniyavale - 10

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.