(Reading time: 10 - 20 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

அவளையும் வந்து ஒட்டிக் கொண்டது.

  

‘வேண்டாம் பாரதி, இது நல்லதிற்கில்லை...’ என்று அவளின் மூளை எச்சரிக்கை மணி அடிக்கவும், அவசரமாக பார்வையை விவேக்கின் முகத்தில் இருந்து விலக்கினாள்.

  

ஒன்றிரண்டு வினாடிகளுக்குப் பின் மீண்டும் விவேக்கைப் பார்த்தவள்,

  

"விவேக் சார்... உங்க தங்கை என் ஸ்டுடென்ட்.... ஸ்டுடென்ட்டின் உறவினர்களோடு இது போல் பர்சனல் உறவுகள் வளர்த்துக் கொள்வது சரி இல்லை... அங்கேயே உங்கள் கேள்வி முடிந்து போய் விடுகிறது...." என்றாள்.

  

இப்போது விவேக்கின் முகத்தில் ஆச்சர்ய ரேகைகள் எட்டி பார்த்தன.

  

"சாரி சார், நான் சரின்னு சொல்வேன்னு நினைச்சீங்களோ???" என்ற பாரதியின் குரலில் எவ்வளவு முயன்றும் ஏளனத்தின் சாயல் சற்றே தெரிந்தது.

  

அதை விவேக்கும் கவனிக்க தான் செய்தான்! ஆனால், முன்பு அவர்கள் சந்தித்தப் போது நடந்துக் கொண்டதைப் போல கோபப் படாது, புன்னகை புரிந்தான்.

  

"ம்ம்ம்ம்... அந்த அளவுக்கு என்னைப் பத்தி பெரிய மன்மதன் என்னும் நினைப்பு எல்லாம் எனக்கு இல்லை..."

  

விவேக்கின் புன்னகையை கவனித்து விட்டு, அவன் மன்மதனே தான் என மனதில் நினைத்துக் கொண்டாள் பாரதி. ஆனால் அவனின் கூர்மையான கண்கள், அவள் மனதில் நினைப்பதையும் அறிந்துக் கொண்டால் என்ன செய்வது என நினைத்து, அவசரமாக யோசித்து,

  

"ஆனால், ஒரு ரெண்டு மூணுத் தடவை மட்டுமே பார்த்திருக்கிற என் கிட்ட ஏன் சார் கல்யாணம் பத்திக் கேட்டீங்க????" என்றாள்.

  

"ம்ம்ம்ம்... இது நான் எதிர்பார்த்த கேள்வி தான்... நீங்க என்ன நினைக்குறீங்க?" என்று அவளை ஊடுருவுவது போல் பார்த்த படி பதில் கேள்வி கேட்டான் விவேக்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.