(Reading time: 10 - 20 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

என்பது எனக்குத் தெரியும்... அம்மா, அப்பா, அண்ணா எல்லோருக்கும் இந்த விஷயம் தெரிந்த போது அதிர்ச்சி தான்... சின்ன குழந்தை என்று நினைத்தவள் பேசிய விதம் இன்னும் பெரிய அதிர்ச்சி தான்... இந்த விஷயத்தை தெளிவாக முடிக்க நினைத்தேன்...

  

அந்த சரவணனை நான் கெட்டவன்னு சொன்னால் என் தங்கை நம்பவில்லை... அவளுக்கு புரிய வைக்க அந்த சரவணனை பேச என் ஆபீஸ் ரூமுக்கு வரச் சொன்னேன்... அவனுக்குத் தெரியாமல் என் தங்கையை பக்கத்து ரூமில் இருக்க சொன்னேன்... எதிர்பார்த்தது தான் நடந்தது... முதலில் பெரிய வசனம் எல்லாம் பேசியவன், இந்த சொத்து முழுக்க என் அப்பா உடைய சொந்த சம்பாத்தியம், அவருக்கு பிடிக்கா விட்டால் ஒரு சல்லி காசும் கிடையாது என்று நான் சொல்லவும் அவனுக்கு பேரதிர்ச்சி தான்... ஆனால், இப்போதே அவன் என் தங்கையை விட்டு விலகி போனால், பத்து லட்சம் ரூபாய் உடனே தரேன்னு நான் சொல்லவும், அதே இன்ஸ்டன்ட்டில் சரி என்று ஏற்றுக் கொண்டான்... மதுவை கூப்பிட்டு அவள் முன்பே தான் சரவணனுக்கு அந்த பணத்தைக் கொடுத்தேன்... மதுவுடைய பொருள் எதுவும் அவனிடம் இல்லை என்பதை எல்லாம் கேட்டு தெரிந்துக் கொண்டு தான் கொடுத்தேன்..."

  

விவேக்கின் மன நிலையை உணர்ந்தவளாக,

  

"உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு புரியுது சார்... ஏதோ பத்து லட்சத்தோடு போச்சே என்று சந்தோஷ படுங்க..." என்றாள் பாரதி.

  

"நிஜம் தான் பாரதி, நானும் அப்படி தான் நினைத்தேன்... ஆனால், மது ரொம்பவே மாறிப் போனாள். அவளுடைய அந்த பழைய மகிழ்ச்சி, கலகலப்பு எல்லாமே தொலைந்துப் போச்சு. முதலில் சில மாதங்கள் எங்க யாரையும் முகம் பார்த்துக் கூட அவள் பேசலை. பணத்துக்காக ஒருவன் வீசிய வலையில் விழுந்து விட்டோமே என்ற வெட்கம்... ஆனாலும் இனி அவளை தனியாக விடுவது சரி இல்லை என்று தோன்றியது... அம்மா, வேலை நேரத்தை குறைத்துக் கொண்டார்கள்... இருந்தாலும், அவள் வயதுக்கு ஏத்த யாரேனும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்தது... அந்த விஷயத்தில் எங்களுக்கு அதிர்ஷ்டம் தான். அண்ணி தங்கமானவங்க... நாங்கள் விரும்பிய படியே மதுவிடம் நன்றாக பழகுறாங்க... ஆனால் பாரதி, மது பழைய மாதிரி இன்னும் மாறலை... பட், கொஞ்ச நாட்களாக அவளிடம் பல மாற்றங்களை பார்க்கிறேன்... அது எதனால் என்று நான் சொல்லி உங்களுக்குப்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.