சொல்லனும். அவள் எங்களுக்கு எப்போதும் குழந்தையாக மட்டும் தான் தெரிந்தாள். எங்க வீட்டு தேவதையான அவளுக்கு வேண்டியதை எல்லாம் வாங்கி கொடுக்க வேண்டும்... அவளை முகம் கோணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அப்படின்னு எல்லாம் நினைத்த எங்களுக்கு, அவள் வளர்ந்து விட்டதையும், அவளுக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்து நெறி படுத்த ஒருவர் வேண்டும் என்பதும் புரியலை. எங்க அம்மா, எங்க எல்லோரிடமும் ஒரு தோழி போல் தான் பழகுவாங்க ஆனால் அவங்களும் வேலை மும்முரத்தில் மதுவை கவனிக்காது விட்டு விட்டாங்க... ஒரு நாள் நான் மீட்டிங்கிற்காக வெளியே போகும் போது, மதுவையும் அந்த சரவணனையும் ஒன்றாக பார்த்தேன்... அப்படியே ரத்தம் கொதிப்பது போல் இருந்தது... ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல், மீட்டிங்கை கேன்சல் செய்து விட்டு, மதுவிடம் அமைதியாக பேசி வீட்டுக்கு அழைத்து வந்தேன்..."
எதையோ நினைத்து விவேக் இங்கே பேச்சை நிறுத்தவும்,
"சாரி சார்.... உங்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருந்திருக்கும் என்பது புரியுது.... பதினைந்து பதினாறு வயதில் விவரம் பெரிதாய் புரியாது தானே?" என்றாள் பாரதி அவனை தேற்றும் விதமாக.
அவள் பக்கம் மீண்டும் ஒரு ஆச்சர்ய பார்வையுடன் தொடர்ந்தான் விவேக்.
"அதுவும் சரி தான்! ஆனால் அதிர்ச்சி அத்தோடு முடியலை, பாரதி. வீட்டுக்கு வந்து மதுவிடம், அமைதியாக பேசினால், அவளோ மூன்று வருடம் கழித்து சரவணனை தான் கல்யாணம் செய்துப்பேன்னு பிடிவாதம் பிடித்து ஒற்றைக் காலில் நின்றாள். கனிவாய், அதட்டி, மிரட்டி, எப்படி சொல்லியும் அவள் மாறுவதாக தெரியலை. அந்த சரவணனை கல்யாணம் செய்துக் கொண்டால், அவள் வசதிகள் இல்லாது கஷ்டப் பட வேண்டும் என்று எடுத்துச் சொன்னேன்... அதற்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா? சொத்தில் என்னுடைய பங்கை கொடுங்கள், அதை வைத்து நாங்கள் வாழ்ந்து கொள்கிறோம் என்று...
நிஜமாகவே பாரதி, அது வரைக்கும் இந்த சரவணன் ஒருவேளை நல்லவனாக இருப்பானோ என்று ஒரு சின்ன சந்தேகம் இருந்தது.... ஆனால், மது சொத்தை பற்றி பேசிய உடனேயே உண்மை புரிந்து விட்டது... என் தங்கை இது போல் சொத்து பற்றி எல்லாம் பேச மாட்டாள்