(Reading time: 5 - 9 minutes)
Manasa Theevu
Manasa Theevu

தந்தையை சமாதானம செய்தான். அவன் கண்களும் கலங்கி இருந்தது.

  

அடுத்த நாள், தன் மகன்கள், மகள்களை, அழைத்து, வியாபாரத்தைத் பிரித்து எழுதி இருப்பதையும், தனக்கும் தன் மனைவிக்கும் ஏதாவது நடந்தால், என்ன செய்ய வேண்டும் என்றும், தன் குழந்தைகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று, தன் மகன் ஆனந்தனிடமும், தன் மைத்துனன் கார்த்திக்கிடமும் கேட்டுக் கொண்டார், மாதவன் நாயர்!

  

என்ன அச்சா,  இதுக்கு என்ன அவசரம் இப்போ? ஏன் இவ்வளவு விரக்தியா ஆயிட்டீங்க? அம்மைக்கு சரியாயிடும், நீங்க கவலை படாதீங்க, அச்சா!" என்றான் ஆனந்தன், தன் அப்பாவை அணைத்துக் கொண்டு.

  

அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு சென்றார் மாதவன் நாயர் தன் மனைவியைப் பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருந்தார. சிறிது நேரம் பிறகு ஒரு பெருமூச்செறிந்து அவளருகில் உட்கார்ந்து அவள் கையை தன் கையோடு சேர்த்து வைத்துக் கொண்டார். அப்படியே நகராமல் அவள் அருகிலேயே உட்கார்ந்தார்.

  

இரண்டு நாள் இப்படியே போயிற்று. எவ்வளவோ டாக்டர்கள், எடுத்துக் கூறியும், அவர் மனைவியிடம் இருந்து நகரவே இல்லை. அவள் கையோடு தன் கையை சேர்த்து வைத்து அங்கேயே அவள் பக்கத்தில், தன் தலையை சாய்த்துக் கொண்டு படுத்திருந்தார்.  சாப்பாடு தண்ணீர் எதுவும் இல்லை. எல்லோரும் பயந்து விட்டனர் மாதவன் நாயருக்கு என்ன ஆகிவிடுமோ என்று.

  

மானசாவின், அம்மா கதறிவிட்டார். அப்பாவும் பேச்சு இல்லாமல் உட்கார்ந்திருந்தார்.

  

இரண்டு நாள் கழித்து மானசாவின் மூச்சு நின்றுவிட்டது மாதவன் நிமிர்ந்து தன் மனைவியை நோக்கி குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டார். மான்சி என்னையும் கூட்டிக் கொண்டு போ!" என்று கூறிவிட்டு, அப்படியே அவள் மீது தன் தலையை சாய்த்து அவரும் உயிர் நீக்கினார்.

  

இருவர் உடலையும் அந்தத் தீவில் அடக்கம் செய்தனர்.அந்தத் தீவில் இருவர் காதல்

One comment

  • மிக சரியான இடத்தில் முடித்து வைத்துவிட்டீர்கள். இதுவே கிட்டதட்ட happy ending மாதிரிதான்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.