ஆனந்தனும், சஹானாவும், " அச்சா, அம்மைக்கு எப்படி இருக்கு? என்ன ஆச்சு அச்சா?" என்று பெருத்த குரலில் அவரை உலுக்கினார்கள்.
அவர் தனியாக கண்ணில் கண்ணீருடன் உட்கார்ந்து இருந்ததை பார்த்த அவர்களுக்கு நடுக்கம் கண்டது.
" எண்ட மோளே, எண்ட மோனே,வரு! " என்று இருவரையும் இரு புறமும் அனைத்துக் கொண்டார் மாதவன்.
மற்ற குழந்தைகள் வருவதையும் அப்போது கண்டார் மாதவன். அவர்களையும் தன் அருகில் அழைத்து அனைத்துக் கொண்டார்.
பிறகு நடந்ததை தன் பிள்ளைகளிடம் கூறினார் மாதவன். குழந்தைகளுக்கு என்ன செய்வதென்றும், தன் தந்தையை, எப்படித் தேற்றுவது என்று அவர்கள் யோசித்துக் கொண்டு இருந்த போது , "அம்மைக்கு எப்போ கான்ஷியஸ் வரும் என்று டாக்டர் சொன்னார் ?" என்று ஆனந்த் பைரவ் கேட்டான் .
"அரியலை, எப்போ கோன்ஷியஸ் வருமோ அரியலை " அவர் தலையை ஆட்டி ஆட்டி கூறும்போது, அவர் கண்ணிலிருந்து வந்த கண்ணீரை தன் குழந்தைகள் பார்க்காமல் இருக்க வேறு புறம் திரும்பி, அதை துடைத்துக் கொண்டார். பிறகு குழந்தைகளை, மானஸாவை பார்க்க கூட்டிக் கொண்டு போனார், மாதவன்.
அடுத்தடுத்த நாட்களில் ஆனந்தை தன்னோடு வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் அவனுக்கு விவரமாக சொல்லிக் கொடுத்தார். வக்கீலை வரவழைத்து உயில் ரெடி செய்தார் மாதவன். அதை பற்றி விவரமாக தன் மகனுக்கு கூறினார்.
"சரிப்பா, இப்ப என்ன அவசரம்?"
"உன் அம்மைக்கு இன்னும் கோன்சியஸ் வரவில்லை, அவளுக்கு என்னவென்று தெரியவில்லை, அவள் மீண்டு வராவிட்டால்?"
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.