This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“ஹலோ சுந்தரி! எதுக்கு இப்படிப் பயந்து நடுங்குற?” – இனியவன்.
சுந்தரி அவனுடைய பிடியில் இருந்த கையை இழுத்து எடுத்துக் கொண்டாள்.
“உள்ளே போகாதீங்கன்னு சொன்னேன். கேட்டீங்களா? இப்போ கதவு வேற மூடிடுச்சு!”
“அதனால என்ன? கதவை திறந்தா போச்சு”
“அது அத்தனை சுலபமில்லை. இந்த கதவை வெளியே இருந்து திறக்குறதே கஷ்டம், உள்ளே இருந்து திறக்கவே முடியாது. நீங்க தெரியாம உள்ளே வந்திர போறீங்கன்னு தான் உங்களை தடுக்க வந்தேன்”
“எனக்கு அது புரியலை சுந்தரி. சாரி.”
“பரவாயில்லை, உங்க செல் எடுத்து அம்மாவை கூப்பிடுங்க. அவங்க யாராவது வந்தா தான் கதவை திறக்க முடியும்”
“நான் மொபைலை எடுத்துட்டு வரலையே”
“என்னது?”
சுந்தரியின் குரலில் இருந்த அதிர்ச்சி இனியவனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.
“எதுக்கு இப்படி ஷாக் ஆகுற? இந்த கதவை நானே திறக்குறேன்”
“இந்த இருட்டுல கதவு எங்கே இருக்குன்னு தெரியுறதே கஷ்டம். அப்புறம் எப்படி திறப்பீங்க? அதும் இந்த கதவை திறக்குறது சுலபமில்லை”
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்”
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.