“அதுக்குள்ள உங்களுக்காக இத்தனை பேர் வந்திருக்காங்களே”
“என் மேல பாசம் அதிகம், இப்ப நீ எனக்காக வரலையா அப்படி, சரி வா எப்படியாவது என்னை ரிலீஸ் பண்ணு” என சொல்ல அவளும் சரியென்றாள்.
அழகர் ஒருவனுக்காக நீலாம்பரி, மீசூயி, அவளது அண்ணன் மீலீங் அவனுடைய அப்பா, விக்ரம், வினிதா, ரங்கராஜன், காதம்பரி, அவளது தந்தை ராமசந்திரன், மாயா அவளது தந்தை என வரிசையாக வந்திருக்கவும் போலீஸ் அதிகாரிகள் சற்று கலவரமடைந்தார்கள்.
எந்த வித கலக்கமும் இன்றி அவர்களிடம் வந்து நின்றவன் அனைவரையும் ஒன்றாக பார்த்ததில் சந்தோஷத்தில் சிரித்து கைகூப்பி வணக்கம் வைத்தான் அழகர்.
அழகர் பற்றி தெரிந்த அடுத்த நொடி முதலில் வந்தது நீலாம்பரிதான் அவள் வரும் போதே வக்கீலையும் உடன் அழைத்து வந்திருந்தாள்.
அடுத்து மீசூயி தனது குடும்பத்துடன் வந்து எதனால் பிரச்சனை வந்தது என்பதை போலீசிடம் புகார் தெரிவித்தாள்.
அடுத்து வந்த வினிதாவும் ரங்கராஜனும் அழகரின் ஒர்க் பர்மிட் மற்றும் விசாவுடன் வந்திருந்தார்கள். அவர்கள் துணைக்கு ஒரு வக்கீலையும் அழைத்து வந்திருந்தார்கள்.
அடுத்து மாயா தன் தந்தையுடன் அழகரிடம் கல்யாணத்திற்கு சம்மதம் வாங்க வந்திருந்தாள். அவளும் விவரம் அறிந்து தன் தந்தையுடன் அழகரை தேடி வந்திருந்தாள்.
அடுத்து காதம்பரி எதற்கோ அமிர்தாவிடம் பேசி விவரம் அறிந்த அடுத்த நொடியே தன் தந்தை ராமசந்திரனை இம்சித்து அவரை இழுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் வந்தடைந்தாள்.
அடுத்து விக்ரம் லீவு என அறிந்து அழகரை காண வந்தவன் அழகர் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதை அறிந்து அவனும் வந்து சேர்ந்தான்.
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.