(Reading time: 5 - 9 minutes)
Nilave mukam kattu - Siddarth
Nilave mukam kattu - Siddarth

“நான் எதுக்கு அவங்களை இப்போ சந்திக்கனும் விபுல்?

  

“நாம் ஆல்மோஸ்ட் ஒன் இயரா டேட் செய்றோம் ஏஞ்சல். இதுக்கு மேல நெக்ஸ்ட் ஸ்டெப்ஸ் பத்தி யோசிக்க தொடங்கலாமே?

  

“ஒ, விபுல்!” ஏஞ்சல் அலுப்புடன் பார்வையை வேறு பக்கம் திருப்பினாள்.

  

“உனக்கு கமிட்மென்ட் பிடிக்காது, அது தானே?? ஹீனா ஹல்தி செரிமோனி பத்தி சொன்னப்போவே உன் முகத்தைப் பார்த்தேன். கல்யாணப் பொண்ணு உன் பக்கத்துல வரலைன்னு தெரிஞ்சதுக்கு மேல தான் நீ நார்மலுக்கு திரும்பின!”

  

ஏஞ்சல் மெல்லிய பதற்றத்துடன் தலை அசைத்தாள்.

  

“என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியலை விபுல். கல்யாணம், பேரன்ட்ஸ் பார்க்குறது இதெல்லாம் யோசிச்சாலே எனக்கு டென்ஷனா இருக்கு.”

  

“இப்படி சொன்னா எப்படி ஏஞ்சல்? உன் வாழ்க்கையில நீ செட்டில் ஆக வேண்டாமா?

  

“ஐ டோன்ட் தின்க் ஸோ. இந்த வாழ்க்கையே எனக்குப் பிடிச்சிருக்கு.”

  

விபுல் ஆழமாக மூச்சை எடுத்து வெளியேற்றினான்.

  

“ஐ ஆம் சாரி ஏஞ்சல். பட் நமக்குள்ளே வொர்க் அவுட் ஆகாது. இப்படி டைம் பாஸ் ரிலேஷன்ஷிப் எனக்கு செட் ஆகாது. லெட்ஸ் பார்ட் வேஸ்! நான் உன்னை ஹர்ட் செய்யலைன்னு நம்புறேன். தயவு செய்து என் மேல கோபப் படாதே வருத்தப் படாதே! ப்ளீஸ்!”

  

விபுல் கெஞ்சுவதுப் போல சொல்லி விட்டு ஏஞ்சல் என்ன சொல்லப் போகிறாளோ என்று அவளை நோக்கினான்.

  

ஏஞ்சலின் முகம் அஷ்டக் கோணலாக இருந்தது.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.