(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"ஏன் பவி திடீர்னு மவுன விரதமா??? ஒரே மவுன கீதம் பாடுறீங்க?" என்று பாரதியே தோழியிடம் கேட்டாள்.

  

பவித்ரா அமைதியாக பாரதியை ஒரு பார்வைப் பார்த்தாள்! பின்,

   

"நீ என் கிட்ட எதையாவது மறைப்பன்னு நான் இதுவரை நினைத்ததே இல்லை, பாரதி... அதில் எனக்கு கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு... ஆனால் விவேக்கிற்கும் உனக்கும் நடுவில் இருக்கும் எல்லாத்தையும் என் கிட்டே நீ சொல்லனும்னும் நானும் எதிர்பார்க்க கூடாது தானே?" என்றாள்!

  

"என்ன பவி நீ, இப்படி எல்லாம் சொல்ற? அந்த மாதிரி உன் கிட்ட மறைச்சு வச்சு விவேக் கிட்ட சொல்ற மாதிரி எல்லாம் எதுவுமில்லை... உன் கிட்ட சொன்னால் நீ தேவையே இல்லாமல் கிண்டல் செய்வ, அதனால் தான் வேண்டாம்னு நினைச்சேன்..."

  

"ம்ம்ம்ம்ம்...."

  

"நிஜம் பவி...."

  

"நம்பிட்டேன்...."

  

"ப்ளீஸ் பவி... "

  

"சரி விவேக் எப்போ உன் கதை எல்லாம் கேட்டார்???"

  

"அன்னைக்கு சனிக்கிழமை ஹாஸ்டல் வந்திருந்தார்னு சொன்னேன்ல அப்போ..."

  

"ஓகே.... அன்னைக்கு ஈவ்னிங் முதல் நேற்று ஈவ்னிங் வரை என்னோட வீட்டில தானே இருந்த??? இன்னைக்கு காலையிலே இருந்து நாம ரெண்டுப் பேரும் ஒன்னா தான் இருந்தோம்... விவேக்குக்காக மறக்காமல் பேகிலேயே வச்சு எடுத்துட்டு வந்திருக்க... ஆனால்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.