(Reading time: 7 - 13 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

என் கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லலை..."

  

"அது...."

  

ன்ன சொல்லி சமாதானப் படுத்துவது என்று பாரதி தவிக்கும் போதே,

  

"ஆனால் எனக்கு சந்தோஷமாவும் இருக்கு, பாரு... நீ இந்த மாதிரி மாறணும்னு தானே நானும் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்... விவேக்குக்கும் உனக்கும் நடுவில் நடக்கும் எதையும் நீ என் கிட்டே சொல்லனும்னு நான் எதிர்பார்க்கவே மாட்டேன்..." என்று தோழிக்காகப் பேசினாள் பவித்ரா.

  

ஆனால் அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக பாரதியின் முகத்தில் அதிர்ச்சி இருந்தது...

  

பவித்ராவிற்கு காரணம் புரியவில்லை!

   

"இது என்ன பாரு??? இப்போ எதுக்கு இந்த அதிர்ச்சி????"

  

"பவி, உனக்கு என்னைப் பற்றி நல்லா தெரியும்... ப்ளீஸ் யோசிச்சு சொல்லு, உனக்கு நிஜமாகவே எனக்கும் விவேக்கிற்கும் நடுவில் இருக்கும் உறவு சாதாரணமான ஒன்றாக இல்லையா???"

  

"இது என்ன கேள்வி... உன்னை நீயே கேட்டு பார்... எதுக்காக மது மேல உனக்கு இந்த தனி பாசம்? வேற எத்தனை பேர் இப்படி ஹாஸ்ட்டல்ல வந்து பேசினால் நீ இப்படி பொறுமையா பேசுவ? அதை எல்லாம் விடு, இப்படி எத்தனை பேர் கிட்ட பேசுற விஷயத்தை என்கிட்டே மறைக்கணும்னு நினைச்சிருக்க... அந்த பிரபு பேசினது எல்லாத்தையும் அப்படியே ஒப்பிச்ச தானே???"

  

பாரதி இன்னும் அதிகமாக திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள். பவித்ரா சொன்னதைக் கேட்கும் போது அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது.... எப்படி இதை அனுமதித்தாள்???? பவித்ரா இந்த அளவிற்கு எண்ண வேண்டும் என்றால்..... கடவுளே ஒரு முறைப் பட்ட அடி போதாதா??? ஏன் மீண்டும்??? இந்த அளவிற்கு விவேக்கிடம் பேசி இருக்க கூடாதோ... 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.