(Reading time: 6 - 12 minutes)
Un katal iruntal potum
Un katal iruntal potum

ராஜேந்திர ரத்னூவிற்கு சிலையே வைக்கலாம் என்றுக் கூட அவளுக்கு தோன்றியது!!!

  

மொத்தத்தில் அவள் அந்த ஊரின் மிகப் பெரிய ரசிகையாக மாறி இருந்தாள்!

   

ந்த எண்ணங்களின் நடுவே காலையில் நடந்த நிகழ்ச்சி அவளின் மனதில் மீண்டும் தோன்றியது. சுற்றுலாவிற்காக என மற்ற தோழிகள் நொறுக்குத் தீனி வாங்க கடைக்கு சென்றார்கள். சௌந்தர்யா திராட்சைப் பழங்கள் வாங்க ஒரு சிறியப் பழக் கடைக்குச் சென்றாள்.

  

அவளுக்காக திராட்சையை பேப்பரில் சுற்றி சிறு ரப்பர் பேன்ட் போட்டு அவளிடம் அந்த கடைக்காரர் நீட்டிய வேளையில், யாரோ கிட்டத்தட்ட மேலே விழுந்து விடுவதுப் போல் அவள் மீது வந்து மோதினார்கள்... கோபத்துடன் திரும்பி பார்த்தால் ஒரு இளைஞன் நின்றிருந்தான்...

  

சௌந்தர்யா கோபமாக ஏதோ சொல்ல துவங்கும் முன்,

  

“சாரி சாரி, கிழே இருந்த பழத் தோலில் வழுக்கிடுச்சு, சாரிங்க...” என்றான் அவன் அவசரமாக.

  

தன் மீது வந்து மோதியதற்கு கோபம் இருந்தப் போதும், அவன் பேசிய போது சட்டென்று எதுவும் சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை...

  

திகைத்துப் போய் அவள் பார்த்திருக்கும் போதே, அருகில் நின்றிருந்த பெண் ஒருத்தி,

  

“பார்த்து நடப்பா! பொண்ணுங்க மேல இப்படியா வந்து விழுறது?” என அவளுக்காக பேசினாள்.

  

“சாரி தெரியாமல் நடந்திருச்சு...” என மீண்டும் அவன் மன்னிப்பு கேட்டான்.

  

அதற்கு மேல் அமைதியாக இருப்பது சரியில்லை என தோன்றவும்,

  

“இட்ஸ் ஓகே, பரவாயில்லை...” என மெல்ல முனுமுனுத்து விட்டு திராட்சையை வாங்கிக்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.